TIE கட்டுவது எப்படி..???

நான் எனது பள்ளிப்பருவதில் TIE அணிந்து செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் எப்போதுமே எனக்கு மெட்ரிகுலெசன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பார்க்கும் போது ஒரு ஏக்கம் இருக்கும். இது எனது பள்ளி பருவம் முதல் அலுவலகம் வரை தொடர்ந்தது.

ஒரு முறை வேலை நிமித்தமாக மும்பை செல்ல வேண்டிருந்தது. அது ஒரு மென்பொருட்கள் சம்மந்தப்பட்ட மாநாடு என்பதால் அங்கு எங்களது நிறுவனத்தின் மென்பொருட்களை உபயோகிக்கும் பல நிறுவனங்களின் பணியாளர்கள் வருவார்கள். பொதுவாக இந்த மாதிரி மாநாடு நடக்கும் போது, மாநாட்டிர்க்கு முந்தினம் நாம் எவ்வாறு பேசவேண்டும், எவ்வாறு உடை அணிய வேண்டும் என்று ஒரு வகுப்பு எடுப்பார்கள். அப்போது தான் முடிவானது நான் TIE அணிந்து வர வேண்டும் என்று :)
நல்ல வேளை எனது நண்பணிடம் இருந்து அவனது TIEகளை ஒரு பாதுகாப்புக்காக எடுத்து வைத்திருந்தேன். என்னத்த எடுத்து வைத்து என்ன புண்ணியம், எனக்கு TIE கட்ட தெரியாதே.. :)

மறுநாள் TIE கட்ட ஆரம்பித்தேன், ஒரு அறைமணி நேர போராட்டம்.. ஹ்ம் ஹூம் முடியவில்லை.... :) அப்போதுதான் நினைவுக்கு வந்தது, எனது நண்பன் அனுப்பிய email. அந்த emailல் TIE கட்டுவது பற்றி தெளிவாக படங்களுடன் குறிப்பிட பட்டிருந்தது. ஒரு வழியாக அதை கண்டுபிடித்து TIE கட்டி கொண்டேன்.

அந்த படங்களை தான் இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

Bow Tie Scot Tie

Prince Albert

Four In Hand

Cross Knot

Windsor

Small Knot

ஆனா இதில் மிக பெரிய comedy என்னவென்றால், நான் மாநாட்டுக்குள் நுழைந்ததும் அங்கு மிக குறைவானோர் மட்டுமே TIE அணிந்திருந்தனர். அதன் பிறகென்ன அடுத்த அறைமணி நேரத்தில் எனது அறைக்கு சென்று TIE ஐ கலைந்து விட்டு சாதாரணமாக வந்து அனைவருடன் இணைந்து கொண்டேன்.

இறுதியில் எனது TIE  கட்டும் கனவு அந்த அறைமணி நேரம் தான் நிலைத்தது... அதன் பிறகு கனவு கலைந்தது.... :)
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment