"கோ" பாடல்கள்

நான் வெகு ஆவலுடன் எதிர்பார்த்த "கோ" திரைப்பட பாடல்கள் ஒரு வழியாக வெளிவந்துவிட்டது. நேற்று இரவு தான் பாடல்களை ஒரு வலை தளத்தில் கேட்டேன்.


இயக்குநர் K.V.ஆனந்த் மற்றும் Harris ஜெயராஜ் "அயன்" திரைப்படத்திற்கு பிறகு மறுபடியும் இணைந்துள்ள படம் தான் "கோ". வழக்கம் போல இந்த திரைப்படத்திலும் துள்ளிசை (Peppy) பாடல் மற்றும் மென்மையான (Melody) பாடலும் உள்ளன. இதை தவிர, Hip-Hop மற்றும்  Rap வகை பாடல்களையும் கலந்து கொடுத்துள்ளார். எனது கருத்து என்னவென்றால், இன்றைய இளைய தலைமுறையினர் ரசனைக்கு ஏற்றார் போல் பாடல்கள் உள்ளன. பாடல்களை கேட்டவுடன் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்காது. சரி இனி பாடல்களை பற்றி....

#என்னமோ ஏதோ....
இந்த பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்த பாடல். கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும். முக்கியமாக இந்த பாடலின் வரிகள் மிக அருமையாக உள்ளது. அதற்கு ஏற்றார் போல இசையும் அமைந்துள்ளது. ஆலாப் ராஜூ மற்றும் பிரஷாந்தினி இந்த பாடலை பாடியுள்ளனர்.

பாடலின் சில வரிகள் கீழே....

முத்தமிட்ட மூச்சு காற்று,
பட்டு பட்டு கெட்டு போனேன்...
பக்கம் வந்து நிற்கும் போது,
திட்டமிட்டு எட்டி போனேன்...
நெருங்காதே பெண்ணே,
எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்...
அழைக்காதே பெண்ணே,
என் அச்சங்கள் ச்சாகும்...
சிரிப்பால் எனை நீ,
சிதைத்தாய் போதும்....!!!

#வெண்பனியே...
இந்த பாடல் ஒரு மென்மையான பாடல். சில கால இடைவெளிக்கு பிறகு பாம்‌பே ஜெயஸ்ரீ, ஹாரிஸ் இசையில் பாடியுள்ளார். எனக்கு எப்போதுமே இவரின் அந்த கரகரப்பான (Husky) குரலில் ஒரு மோகம் உண்டு. இந்த மோகம் இவரின் "வசிகரா" பாடலில் இருந்து தொடர்கிறது.


இந்த பாடலின் ஒளிப்பதிவு அருமையாக இருக்கும் என்பது என் கணிப்பு. ஸ்ரீராம் பார்த்தசாரதியும் இப்பாடலை இணைந்து பாடியுள்ளார்.

#நெற்றி பொட்டில்....
கண்டிப்பாக இந்த பாடல் அனைத்து இளையதலைமுறைக்கும் பிடிக்கும் என்பது என் கணிப்பு. பாடல் வரிகளும் சரி, இசையும் சரி, பாடியவிதமும் சரி, அருமையாக உள்ளது. சுருக்கமாக சொன்னால் இளையதலைமுறைக்கான தேசிய கீதம் தான் இந்த பாடல். இந்த பாடலை நரேஷ் ஐயர் பாடியுள்ளார்.

#கல கல கானா....
இந்த பாடலும் இளமை துள்ளும் பாடல் வகை தான். இந்த பாடலை திப்பு, கிரீஷ் மற்றும் ஹரிசரண் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு ஷயனோராவின் மின்சார குரலையும் சேர்த்துள்ளனர்.

#அமளி துமுளி....
இந்த பாடல் ஹாரிஸின் வழக்கமான துள்ளிசை வகை பாடல். இந்த பாடலை ஹரிஹரன், சுவேதா மோகன் மற்றும் சின்மயி ஆகியோர் பாடியுள்ளனர்.

#அக நக....
இந்த பாடல் Rap மற்றும் DJ வகை பாடல். இதை போன்ற பாடலை ஏற்கனவே "தாம் தூம்" திரைப்படத்தில் கேட்டுள்ளோம். இருந்தாலும் வித்தியாசமாகவே உள்ளது. இந்த பாடலை, விஜய் பிரகாஷ், திப்பு என்று ஒரு கூட்டமே பாடியுள்ளது.


மொத்தத்தில், "கோ" பாடல்கள் ஒரு வித்தியாசமான அனுபவம்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment