எங்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் வாங்குவதற்கு முன்பு வரை எனது பாட்டி வீட்டில் எங்களது வீட்டார், எனது பெரியம்மா வீட்டார், சித்தி வீட்டார், மாமா வீட்டார் என்று அனைவரும் ஒன்று கூடி இந்த பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தோம்.
இந்த முறை பொங்கலுக்கு ஊருக்கு செல்ல பேருந்தில் முன் பதிவு எதுவும் செய்யவில்லை. அதனால் கிடைத்த பேருந்தில் ஏறி சென்றேன். ஊருக்கு சென்ற உடன் அசதியால் நன்றாக தூங்கி விட்டேன்.
சரியாக 6 மணிக்கெல்லாம் பொங்கல் விட எல்லாம் தயாராக இருந்தது. எனது தந்தை எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்து விடுவார். எனக்கென்று எந்த வேலையும் வைப்பதில்லை :( .
எனது சித்தி கோலம் போடுவது முதல் அனைத்து இதர பணிகளையும் முந்தய நாள் இரவே முடித்து விட்டார்.
விளக்கை முற்றத்தில் வைத்து, அதற்கு முன் கரும்பு, காய்கறி, நெல் முதலியவற்றை படையல் வைத்து, எங்கள் வீட்டு காவலாளிகள் Tiger & Tommy ன் பாதுகாப்புடன் முதலில் எங்களது புதிய வீட்டில் பொங்கல் விட்டோம் :) .
அதன் பிறகு, எங்களது பழைய வீட்டிற்கு சென்றோம். என்ன தான் புதிய வீட்டை கட்டிவிட்டாலும், நாங்கள் பல வருடங்களாக வாழ்ந்த வீடு என்பதால் அங்கும் புதிய வீட்டை போல பொங்கல் விட்டோம்.
வழக்கமாக, பொங்கல் திருநாளில் எங்களது ஊரை சுற்றி ஓட்ட பந்தயம், கோலப்போட்டி, கபடி என்று குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்றார் போல விளையாட்டு போட்டிகள் நடக்கும். நான் மிகவும் சோர்வாக இருந்ததால், நன்றாக தூங்கி விட்டேன். அதனால், அவற்றை காண முடியவில்லை. மாலை நேரத்தில், நண்பர்களுடன் வாசகிரி மலை முருகன் கோவிலுக்கு மட்டும் சென்று வந்தேன்.
இவ்வாறாக பொங்கல் திருநாள் முடிந்தது.
டிஸ்கி:
பொங்கல் திருநாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதில் எனக்கு எப்போதும் உடன் பாடு இருந்ததில்லை. நமது மூதாதையர் காலம் காலமாக சித்திரை மாதம் முதல் நாளை தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். அதை மாற்றி அமைப்பதற்கு இந்த அரசியல்வாதிகள் யார்..??. இவர்கள் தமிழ் மற்றும் தமிழன் என்ற வார்த்தைகளை அவர்களுடைய ஓட்டு வங்கியை நிரப்புவதற்காக மட்டும் உபயோக படுத்திக்கொள்கிறார்கள். இதை எப்போது தான் அனைத்து தமிழ் மக்களும் புரிந்து கொள்ள போகிறார்களோ....? ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 மறுமொழிகள்:
Post a Comment