உங்களால் வெல்ல முடியும் (You can win - Shiv Khera)

இந்த புத்தகம் வாசித்து முடித்த உடன் ஒரு அகத்தூண்டுதலை உங்களுக்குள் உருவாக்கும். இந்த புத்தகத்தை நாம் பல இடங்களில் பார்த்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், முழுமையாக அதை படித்து கடைப்பிடிக்கிறோம் என்றால், அதற்கு வாய்ப்புகள் குறைவே.


நான் இந்த புத்தகத்தை முழுமையாக படித்து முடிக்க இரண்டு நாட்கள் எடுத்து கொண்டேன். இறுதியில், இந்த புத்கத்தில் இருந்து நமக்கு தேவையான கருத்துகள் இருபது மட்டுமே. அந்த கருத்துகளை மட்டும் கீழே கொடுத்துள்ளேன். அனைத்து கருத்துகளையும் கடை பிடிப்பதென்பது கடினம் தான். இருந்தாலும், இதில் சிலவற்றை கடை பிடித்தால் கூட நடைமுறை காலத்தில் பெரிய விஷயமே...

1. எல்லாவற்றிலும் உள்ள நல்லதையே பாருங்கள்.
2. இப்பொழுதே எதையும் செய்துவிடுகிற பழக்கத்தை கொண்டிருங்கள்.
3. நன்றி மனப்பான்மையை வளர்த்து கொள்ளுங்கள்.
4. உண்மையான கல்வி அறிவை பெறுங்கள்.
5. உங்களுக்கென்று ஒரு உயர்ந்த சுய மதிப்பினை வளர்த்து கொள்ளுங்கள்.
6. தீய பாதிப்புகளிலிருந்து விலகி இருங்கள்.
7. அவசியம் செய்ய வேண்டிய காரியங்களை விரும்ப கற்று கொள்ளுங்கள்.
8. நல்ல எண்ணங்களுடன் உங்களது நாட்களை தொடங்குங்கள்.
9. வெற்றி பெற விளையாடுங்கள் - தோல்வியை தவிர்க்க அல்ல.
10. பிறரின் தவறுகளிலிருந்து கற்று கொள்ளுங்கள்.
11. உயர்ந்த ஒழுக்கமுள்ளவரோடு சேருங்கள்.
12. நீங்கள் பெறுவதை விட, அதிகமாக தாருங்கள்.
13. சிரமப்படாமல் ஏதாவது பலன் கிடைக்காதா என்று எதிர் பார்த்திருக்காதீர்கள்.
14. நீண்ட காலத்திட்டங்கள் பற்றியே எப்போதும் சிந்தியுங்கள்.
15. உங்களின் பலத்தை மதிப்பீடு செய்து, அதன் படியே திட்டமிடுங்கள்.
16. ஒரு பரந்த, தொலைநோக்கு கண்ணோட்டத்துடனேயே முடிவெடுங்கள்.
17. உங்களின் நேர்மையை, ஒரு போதும் விட்டு கொடுத்துவிடாதீர்கள்.
18. சவால் விடுங்கள், அதன் மூலம் ஆர்வத்தை கிளருங்கள்.
19. தீய ஆதிக்கங்களிலிருந்து விலகி இருங்கள். நண்பர்களின் அன்பு தொல்லைக்கு இடம் கொடுத்து விடாதீர்கள்.
20. பொறுமையுடன் இருங்கள். பலன்கள் கண்ணுக்கு புலப்படாத போதிலும் தொடர்ந்து செயலாற்றுங்கள்.

டிஸ்கி1:
வாழ்க்கையில் வெற்றி பெற துடிக்கும் அனைத்து நண்பர்களுக்கும், இந்த நூலை நான் பரிந்துரை செய்கிறேன். இந்த நூலின் ஆசிரியர், மிக எளிமையான நடையை தனது எழுத்துகளில் கையாண்டுள்ளதால் அனைவருக்கும் எளிதில் புரியும் .


டிஸ்கி2:
இந்த புத்தகத்தின் தமிழ் பதிப்பும் கிடைக்கிறது, உங்களுக்கு தெரிந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் இந்த புத்தகத்தை பரிசளிக்கலாம்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

6 மறுமொழிகள்:

  1. can u send tamil version ? >kandee0007@gmail.com

    ReplyDelete
  2. @kandee0007: Sorry I don't have the softcopy with me :-(

    ReplyDelete
  3. மிக நன்றிகள், தோழரே!..
    மிக அற்புதமான புத்தகம்!
    மீண்டும் மீண்டும் படித்தால்,
    வெற்றிக்கான வழிகள் நம் நெஞ்சில் பதியும்
    மனதில் உற்சாகம் பிறக்கும்...

    ReplyDelete
  4. anyone has tamil verion pdf.. if yes pls reply

    ReplyDelete