சிறுத்தை

 வெள்ளிக்கிழமை ஆடுகளம் திரைப்படம், சனிக்கிழமை சிறுத்தை திரைப்படம். இந்த முறையும் இரவு காட்சிதான். ஆனால் இந்த முறை, எனது நண்பன் பிரமோதுடன் சென்றிருந்தேன். இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியான விக்கிரமார்குடு திரைப்படத்தின் மறுபதிப்பென்று பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
 இது ஒரு பக்கா மசாலா திரைப்படம். பொங்கலுக்கு வெளியான திரைப்படங்களில், இந்த திரைப்படத்தில் தான் அதிகமான நகைச்சுவை காட்சிகள் உள்ளன. முக்கியமாக சந்தானம் வரும் காட்சிகள் நகைச்சுவை கலாட்டா. தமண்னா வழக்கம் போல ஒரு கவர்ச்சி பதுமையாக வந்து போகிறார். பெரிதாக சொல்லும் அளவிற்கு அவருக்கு கதாபாத்திரம் அமையவில்லை. இந்த திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் அனுஷ்கா இவரை விட நன்றாக நடித்துள்ளதாக நண்பர்கள் மூலம் கேட்டறிந்தேன். அதனால், அன்று முதல் இதன் தெலுங்கு பதிப்பை பார்க்கும் ஆர்வம் எனக்குள் வந்துவிட்டது.
 கார்த்தி நகைச்சுவை மற்றும் சண்டை காட்சிகளில் தனது முத்திரையை பதித்துள்ளார். முக்கியமாக அந்த காவல் துறை அதிகாரி வேடத்தில் நன்றாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில், எனக்கு எந்த பாடலும் கேட்க பிடிக்கவில்லை. வித்யாசாகர் ஏமாற்றி விட்டார்.
 மொத்தத்தில், இந்த திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு திரைப்படம். கதை, கருத்து என்று எதையும் எதிர்பார்க்காமல் சென்றால் ரசிக்கலாம்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment