கான்ஸ்பிரஸி தியரி (Conspiracy Theory)

எனக்கு ஹாலிவுட்டில் பிடித்த நடிகர் என்றால் அது "மெல்கிப்சன்" தான். அவரது நடிப்பில் நான் முதல் முதலில் பார்த்த திரைப்படம் "பிரேவ் ஹார்ட்". அந்த திரைப்படத்தை பார்த்து விட்டு அன்று இரவு முழுவதும் அந்த படத்தை பற்றிய சிந்தனை என் மனதுக்குள் ஓடி கொண்டே இருந்தது. அந்த அளவுக்கு என்னை பாதித்தது அவருடைய நடிப்பு. அன்று முதல் "மெல்கிப்சன்" ரசிகனாக மாறிவிட்டேன். அவரது நடிப்பில் வெளிவந்த மற்றொரு திரைப்படம் தான் "கான்ஸ்பிரஸி தியரி". சமீபத்தில் தான் இந்த திரைப்படத்தை பார்த்தேன்.


 சரி இந்த திரைப்படத்தை பற்றி பார்ப்போம்...
அமெரிக்காவில் வாடகை கார் ஓட்டும் "ஜெர்ரி"ஐ (மெல்கிப்சன்) சுற்றி நடக்கும் விஷயங்கள் தான் இந்த திரைப்படம். இது ஒரு திரில்லர் திரைப்படம். ஜெர்ரி ஒரு விதமான மன நோயால் பாதிக்கப்பட்டவர். தனது வாகனத்தில் பயணம் செய்யும் பயணிகளிடம் ஒவ்வொரு "கான்ஸ்பிரஸி தியரி" (Conspiracy Theory - ஒரு காரியத்தை சட்ட விரோதமாக, ஒரு தனிப்பட்ட குழுவால் செயல்படுத்தப்படுவது) பற்றி எப்போதும் உரையாற்றி கொண்டே இருப்பார். நீதி துறையில் பணி புரியும் "அலைஸ்"ஐ (ஜூலியா ராபர்ட்ஸ்) சந்திக்க செல்கிறார் ஜெர்ரி. அவளிடம்   ஜனாதிபதியை கொல்ல NASA சதி செய்வதாக சொல்கிறார். அவள் ஜெர்ரியை வெறுக்காமல், அவர் சொன்னதை மட்டும் நம்பாமல் அங்கிருந்து வெளியே அனுப்புகிறாள். ஏனென்றால், ஒரு சந்தர்ப்பத்தில் அலைஸை ஜெர்ரி ஒரு பிரச்சனையில் இருந்து  காப்பாற்றி இருப்பார்.  இது போக, ஜெர்ரி எப்போதும் அலைஸின் நடவடிக்கைகளை அவளது வீட்டிற்கு வெளியே இருந்து கண்கானித்து கொண்டே இருக்கிறார்.


ஒரு சமயத்தில் ஜெர்ரியை CIAவை சேர்ந்த சிலபேர் பிடித்து சென்று விடுகின்றனர். ஜெர்ரி மயக்கத்தில் இருந்து விழித்து பார்க்கும் போது கைகள் கட்டப்பட்டு ஒரு இரு சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டிருப்பார். அப்போது அங்கு வரும் மருத்துவர் "ஜோநஸ்" (பாட்ரிக் ஸ்டுவேர்ட்) ஜெர்ரியின் கண்களை திறந்து வைத்தபடி ஒட்டி வைக்கிறார். அதன் பின், LSD என்னும் மருந்தை அவருக்கு ஊசி மூலம் செலுத்தி சித்திரவதை செய்து, ஜெர்ரி எதனை பற்றி அவரது பயணிகளிடம் உரையாடுகிறார் என்று விசாரிக்கும் போது ஜெர்ரி, ஜோநஸின் மூக்கை கடித்து வைத்து விட்டு ஒரு வழியாக அங்கிருந்து தப்புகிறார்.  அதன் பின், ஜெர்ரி ஒரு மருத்துவமனையில் அனுமதிக்க படுகிறார். அங்கே வரும் அலைஸிடம், தனக்கு அருகில் இருக்கும் நோயாளியின் இடத்தை உடனே மாற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவன் இறந்து விடுவான் என்றும் சொல்கிறார். அது போலவே, அடுத்த நாள் காலை அந்த நோயாளி இறந்து விடுகிறார். அதே நேரம், ஜெர்ரி தனக்கு இதயத்தில் வலி ஏற்படுவதாக பொய் சொல்லிவிட்டு, அங்கிருந்து தப்பித்து விடுகிறார்.


ஜெர்ரி, அலைஸை தான் தங்கி இருக்கும் வீட்டிற்க்கு அழைத்து செல்கிறார். அங்கே ஜெர்ரி செய்து கொண்டிருக்கும் பல்வேறு "Conspiracy Theory" பற்றிய குறிப்புகள், மற்றும் அவரை பாதுகாத்து கொள்ள செய்துள்ள தற்காப்பு நடவடிக்கைகள் எல்லாவற்றையும் நோட்டமிடுகிறாள். அப்போது, அங்கே "The Catcher in the Rye"  எனப்படும்  புத்தகம் மட்டும் பல பதிப்புகள் இருப்பதை காண்கிறாள். ஜெர்ரி, தான் அந்த புத்தகத்தை எங்கே பார்த்தாலும் வாங்கிவிடுவது வழக்கம் என்கிறார். ஒரு முறை, ஒரு புத்தக கடையில். ஜெர்ரி "The Catcher in the Rye"  புத்தகத்தை வாங்குகிறார். அப்போது அதை CIA எப்படியோ பின் தொடர்ந்து கண்டு பிடித்து விடுகின்றனர். அதனை தொடர்ந்து அவரை பிடிக்க  செய்யும் முயற்சிகளும், ஜெர்ரி தப்பிக்கும் விதமும் அருமையாக படமாக்க பட்டிருந்தது.


ஒரு கட்டத்தில் அலைஸ், ஜோநஸை சந்திக்கிறாள். அப்போது ஜோநஸ், "Conspiracy Theory" பற்றியும், அதற்காக தாங்கள் உபயோகபடுத்திய நபர் ஜெர்ரி என்றும் கூறுகிறார். மேலும், அலைஸின் தந்தையை ஜெர்ரிதான் தனது கட்டுப்பாடை இழந்தது கொன்றதாக கூறுகிறார். ஜெர்ரியை பிடித்து கொடுக்க தனக்கு உதவுமாறும் கேட்கிறார். இறுதியில், ஜெர்ரி உண்மையில் அலைஸின் தந்தையை கொன்றாரா?? அலைஸ் CIAவிற்கு ஜெர்ரியை கண்டுபிடிக்க உதவினாளா?? என்பதை படத்தில் கண்டுகளியுங்கள்.


இந்த திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்கள் எனக்கு பிடித்திருந்தது.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment