வெண்ணிற இரவுகள்...

பொதுவாகவே எனக்கு யுவன் சங்கர் ராஜாவின் குரலில் ஒரு ஈர்ப்பு உண்டு.  நான் கல்லூரியில் படிக்கும் போது, யுவனின் பாடலை பாடி காண்பித்து தான் எனது கல்லூரி விடுதி நாள் விழாவின் போது இசை குழுவுடன் இணைந்து பாட அனுமதி கிடைத்தது. யுவனுக்கு தனித்தன்மையான, வித்தியாசமான குரல். யுவனின் இசையையும் பிடிக்கும், குரலையும் எனக்கு பிடிக்கும். அவரது குரலில் ஏதாவது பாடல், அவர் இசை அமைக்கும் திரைப்படத்தில் இருந்தால், முதலில் அந்த பாடலை தான் கேட்பேன். அதன் பிறகு தான் மற்ற பாடல்களை கேட்பது வழக்கம்.

அந்த வகையில், சமீபத்தில் நான் கேட்டு, எனக்குள் இப்போது முனுமுனுப்பது "பேசு" திரைப்படத்தில் யுவன் பாடிய "வெண்ணிற இரவுகள்..." என தொடங்கும் பாடல் தான். இந்த பாடலின் வரிகளுக்கு யுவனின் குரல் கச்சிதமாக பொருந்தியுள்ளது. பாடலின் வரிகள் கீழே...


வெண்ணிற இரவுகள்,
காதலின் மௌனங்கள்,
அஞ்சேலோ வண்ணங்கள்,
நம் காதல் ரேகைகள் தானே...
 I have a dream... கடல் காதல்  ஆகுமா ?
I have a dream... நிலம் அன்பால் பூக்குமா?
I have a dream...  ரோமின் சாலைகள்...
I have a dream...  ஹோ ஹோ.. காதலை  சேருமா?

நாளெல்லாம் தேடினேன்,
காதலை பாடினேன்,
யாரென்னை கேட்பினும்,
நல்ல பாடல் சொல்ல வந்தேனே...
 காதலின் சாலைகள் பூமியை  கோர்க்குமா?
எல்லைகள் வேண்டுமா?
என்ற கேள்வியை கேட்குமா?

 I have a dream... கடல் காதல்  ஆகுமா? 
I have a dream... நிலம் அன்பால் பூக்குமா?
I have a dream...  ரோமின் சாலைகள்...
I have a dream...  I have a dream... I have a dream...

யாரோ நதியினில்
போகும்  வழிகளில்
எங்கும் உள்ளதே காதல்...
கூவம் கரையினில்,
ஆர்சிட்(orchid) பூத்திடும்,
மாயம் செய்யுமே காதல்...
Funny கடிதங்கள்,
கீட்ஸின்(Keats) கவிதைகள்,
எழுத சொன்னதே காதல்...
நம் வாங்கும் காதிலே ,
காதல் சொல்லிது வரங்கள் தந்திடும் காதல்...

I have a dream... கடல் காதல்  ஆகுமா? 
I have a dream... நிலம் அன்பால் பூக்குமா?
I have a dream... ஹோ ஹோ.. ரோமின் சாலைகள்...
I have a dream... ஹே.. காதலை  சேருமா? 

I have a dream... கடல் காதல்  ஆகுமா ?
I have a dream... நிலம் அன்பால் பூக்குமா?
I have a dream... ஹோ ஹோ.. ரோமின் சாலைகள்...
I have a dream...  I have a dream... I have a dream...!!!

இந்த பாடலை கேட்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...

வெண்ணிற இரவுகள்...
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment