உனக்கென மட்டும் வாழும் இதயமடி...

யுவன் சங்கர் ராஜா மற்றும் செல்வராகவன் கூட்டணி பிரிந்த பிறகு செல்வராகவன் திரைப்படங்களின் பாடல்களை கேட்கும் ஆர்வம் எனக்கு ஏனோ குறைந்துவிட்டது. மயக்கம் என்ன.. திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் வெளியான இரண்டு நாட்கள் கழித்து கேட்டேன், கேட்டவுடன் எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கவில்லை.எனக்கு பிடித்த மூன்று பாடல்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சைந்தவி மற்றும் ஜி.வி பிரகாஷ்குமார் இணைந்து பாடிய பிறை தேடும் இரவிலே.. என்று தொடங்கும் பாடல். இந்த பாடலை எழுதியது தனுஷ் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. பாடலின் வரிகளும் சரி.. பாடிய விதமும் சரி.. அருமை. இந்த பாடலை முதல் முதலில் கேட்ட போது எனக்கு அந்த அளவிற்கு பிடிக்க வில்லை என்பது வேற விஷயம். இப்பொழுது இந்த பாடல் தான் மயக்கம் என்ன.. திரைப்படத்தில் எனக்கு பிடித்த பாடல். இந்த பாடலின் வரிகள் கீழே..

பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி

பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..
அழுதால் உன் பார்வையும்
அயர்ந்தால் உன் கால்களும்
அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா..
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா..
என் ஆயுள் ரேகை நீயடி.. என் ஆணி வேரடி..
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பணி..
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..
விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்.
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே.. மீசை வைத்த பிள்ளையே..
இதை காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா?
தினம் கொள்ளும் இந்த பூமியில்,
நீ வரும் வரும் இடம்...

இந்த பாடலை கேட்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...




ஹரிஷ் ராகவேந்திராவின் சில்லிடும் குரல் எனக்கு எப்போதுமே பிடித்த ஒன்று, அந்த வகையில் இந்த படத்தில் அவர் பாடிய என்னென்ன செய்தோம்.. என தொடங்கும் பாடலும் அடங்கும். இந்த பாடலை எழுதியது இயக்குனர் செல்வராகவன். இந்த திரைப்படத்தில் அண்ணனும் தம்பியும் சேர்ந்து பாடல் வரிகளில் கலக்கி இருக்கிறார்கள். செல்வராகவன் இந்த பாடலில் வாழ்க்கையின் யதார்த்தத்தை அருமையாக பாடலாக எழுதியுள்ளார். பாடலின் வரிகள் சில கீழே..

என்னில் கடவுள்  யார் தேடுகிறோம்?
பொய்யாய் அவரின் பின் ஓடுகிறோம்
கண்ணை பார்க்க வைத்த கல்லை பேச வைத்த
பெருந்தாயின் கருணை மறக்கிறோம்.
இறைவா.. சில நேரம் எண்ணியது உண்டு..
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா..?? இறைவா..!!

இந்த பாடலை கேட்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...



அடுத்ததாக தனுஷ் எழுதிய நான் சொன்னதும் மழை வந்துச்சா... என தொடங்கும் பாடல். இந்த பாடலின் வரிகளை விட அதை பாடிய விதம் எனக்கு பிடித்திருந்தது. இந்த பாடலை நரேஷ் ஐயர் பாடியுள்ளார். பாடலின் சில வரிகள் கீழே..

நான் சொன்னதும் மழை வந்துச்சா?
நான் சொல்லல வெயில் வந்துச்சா?
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா?
முத்து முத்து பேச்சு..
என் கண்ணுல பொய் இருக்கா?
உன் கண்ணோட மை இருக்கா?
அடி கள்ளியே அறிவிருக்கா?
என் மூச்சு நின்னு போச்சு..
காத்தோடு காத்தாக உள்ளே வந்தியா?
காட்டோட காடாக கட்டிபோட்டியா?
ஊத்தாத ஊத்தேல்லாம் உள்ளே ஊதுது..
என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துது...

இந்த பாடலை கேட்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...

SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment