புத்தம் புது மலரே...

கடந்த சிலவாரங்களாக மனதிற்குள் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் அமராவதி திரைப்படத்தில் இடம்பெற்ற புத்தம் புது மலரே.. எனத் தொடங்கும் பாடல் தான். பாலபாரதியின் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்த பாடலை பாடியுள்ளார். 

இந்த பாடலின் வரிகள் கீழே... 

புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா..?
பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா..?
இதயம் திறந்து கேட்க்கிறேன்  
என்னதான் தருவாய் பார்க்கிறேன்  
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்  
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன்.. தவித்தேன் 

(புத்தம் புது மலரே...) 

செல்லக்கிளி என்னை குளிப்பிக்க வேண்டும்  
சேலைத் தலைப்பில் துவட்டிட வேண்டும்  
கல்லு சிலை போலே நீ நிற்க வேண்டும்  
கண்கள் பார்த்துத் தலைவார வேண்டும்  
நீ வந்து இலை போட வேண்டும்  
நான் வந்து பரிமாற வேண்டும்  
என் இமை உன் விழி மூட வேண்டும்  
இருவரும் ஒரு ஸ்வரம் பாட வேண்டும்  
உன்னில் என்னைத் தேட வேண்டும்..

 (புத்தம் புது மலரே...)

கன்னி உந்தன் மடி சாய வேண்டும்  
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்  
உன்னைக் கட்டிக்கொண்டு தூங்க வேண்டும்  
உந்தன் விரல் தலை கோதிட வேண்டும்  
கையேடு இதம் காண வேண்டும்  
கண்ணீரில் குளிர் காய வேண்டும்  
உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்  
உயிருக்குள் உயிர் சென்று சேர வேண்டும்  
தாயாய் சேயாய் மாற வேண்டும்..
(புத்தம் புது மலரே...)

இந்த பாடலை காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...

SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment