மன் மதன் அம்பு

இந்த வருடத்தில் முதல் முதலில் நான் பார்க்கும் தமிழ் திரைப்படம் "மன் மதன் அம்பு". இரண்டு முறை இந்த திரைப்படத்தை பார்க்க வாய்ப்புகள் கிடைத்தும் தவற விட்டுவிட்டேன் முதல் முறை அலுவலகத்தில் வேலை பழு அதிகமாக இருந்ததால், நண்பர் பரிதியுடன் செல்ல முடியாமல் போனது. அடுத்த முறை, எனது நண்பன் பிரமோத் உடன் PVR இல் பார்க்க முன் பதிவு செய்திருந்த போதும், அன்றைய நாள் எனது "Eliminator" வாகனத்தை வாங்க சென்றதால்
அந்த முறையும் தவறி விட்டது. இன்று முற்பகல் PVR வலை தளத்தில் எதோட்சையாக பார்க்கும் போது, இரண்டு இருக்கைகள் காலியாக இருந்ததால் வேகமாக முன் பதிவு செய்தேன். ஒரு வழியாக சரியான நேரத்துக்கு திரை அரங்கத்தை அடைந்தேன்.


பொதுவாகவே எனக்கு கமல்ஹாசன் திரைப்படங்கள் என்றால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த திரைப்படத்தை பொருத்த வரை எனக்கு எதிர்பார்ப்புகள் குறைவே. படத்தின் "Trailer" பார்த்த போது, இது HITCH திரைப்படத்தின் தழுவலாக இருக்குமோ என்ற எண்ணம் இருந்தது. ஆனால், எனது யூகம் முற்றிலும் தவறாக மாறியது. மேலும் நான் எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் தனியாக சென்றதால் என்னவோ என்னால் இந்த திரைப்படத்தை ரசிக்க முடிந்தது. ஏனென்றால், இந்த திரைப்படத்தை பற்றி நேர்மறை விமர்சங்களை விட, எதிர்மறை விமர்சனங்கள் தான் என் பார்வைக்கு அதிகமாக வந்தது. இனி திரைப்படத்தை பற்றி பார்ப்போம்...


 மன்(மன்னார்) மதன் (மதன கோபால்) அம்பு(அம்பூஜக்ஷி) திரைப்படம் அம்பூஜக்ஷி @ நிஷா (த்ரிஷா) யூரோப்பிற்கு உல்லாச பயணம் செய்வதில் இருந்து திரைப்படம் ஆரம்பிக்கிறது. அங்கு தனது பள்ளி தோழி தீபா (சங்கீதா) மற்றும் அவளது குழந்தைகளுடன் அந்த பிரயாணத்தை தொடர்கிறாள். இப்போது திரைப்படம் பின்னோக்கி பயணிக்கிறது. அம்பூஜக்ஷிக்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பது தான் தொழில். மதன கோபால் (மாதவன்) ஒரு மிக பெரிய தொழில் அதிபர். இவரும், நிஷாவும் காதலிக்கிறார்கள். ஒரு முறை கொடைக்கானல் படப்பிடிப்பின் போது அங்கு குடும்பத்துடன் செல்லும் மதன், அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளால் நிஷாவிற்கு அவள் உடன் நடிக்கும் நடிகர்களுடன் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் கொள்கிறான். அந்த படப்பிடிப்பு முடிந்ததும் அங்கிருந்து இருவரும் கிளம்புகிறார்கள். வரும் வழியில் மதனுக்கும் நிஷாவுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வரும் வாகனத்தை இடித்து அவர்களது வண்டியும் விபத்துக்குள்ளாகிறது. அதன் பின்னர் அந்த வழியே வரும் நிஷாவின் ரசிகர்கள் கூட்டம் அவர்களை சூழ்ந்துகொள்கிறது, பின்னர் காவல்துறையின் உதவியுடன் ஒருவழியாக அங்கிருந்து தப்புகிறார்கள். அப்போது, நிஷா தான் ஏற்கனவே முன்பணம் வாங்கிய திரைப்படங்களை முடித்த பின்னர் தான் மதனை திருமணம் செய்து கொள்ளமுடியும் என்று சொல்லிவிடுகிறாள். இப்போது திரைப்படம் மீண்டும் நிகழ் காலத்திற்கு திரும்புகிறது.ஒரு சமயம் நிஷாவின் பாஸ்போர்ட் அடங்கிய Walletஐ இரண்டு திருடர்கள் களவாடி சென்றுவிடுகிறார்கள். அப்போது தான் மன்னார் (கமல்ஹாசன்) படத்திற்குள் வருகிறார். அந்த திருடர்களிடம் இருந்து நிஷாவின் பொருட்களை கைப்பற்றி ஒரு French காவல் துறை அதிகாரியின் மூலமாக கொடுத்தனுப்புகிறார். ஏன் என்றால், நிஷாவின் நடவடிக்கைகளை
அவளுக்கு தெரியாமல் கண்காணிக்க மதனால் வேலைக்கு அமர்த்தப்பட்டவர் தான் மன்னார். ராணுவத்தில் பணியாற்றி விட்டு இப்போது தனியாக ஒரு துப்பறியும் நிறுவனத்தை நடத்திவருபவர் தான் மன்னார். தனது நண்பனின் மருத்துவ செலவிற்கு மிக பெரிய தொகை தேவை பட்டதால் இவ்வாறு நிஷாவை அவளுக்கு தெரியாமல் கண்காணிக்கும் வேலையை செய்கிறார் மன்னார். ஒரு சந்தர்பத்தில் நிஷவின் நடத்தைகளை முழுவதும் கண்காணித்த பிறகு அவளது நடத்தை பற்றி நல்லதொரு சான்றிதளை மதனிற்கு வழங்குகிறார் மன்னார். மதன் அதை கேட்ட பின்னர், மன்னாருக்கு அந்த வேலைக்காக பேசிய பணத்தை கொடுக்க மறுக்கிறான். அதன் பின்னர் தனது நண்பனை காப்பாற்ற வேற வழி இல்லாமல், நிஷாவின் நடத்தையில் மறுபடியும் சந்தேகம் இருப்பதாக கூறுகிறார் மன்னார். இவ்வாறு தொடர்ந்து நிஷாவை பற்றிய தவறான செய்திகளை மதனிடம் தொலைபேசி மூலம் அறிவித்துக்கொண்டே இருக்கிறார்.மன்னார் ஒரு சந்தர்ப்பத்தில், நிஷா, தீபா மற்றும் அவளுடைய குழந்தைகளுடன் மிகவும் நெருக்கமாகிறார். அதன் பின்னர் அனைவரும் ஒன்றாகவே சுற்றுகின்றனர். ஒரு முறை கவிதை பரிமாறலின் போது இருவரின் மனதும், கருத்துகளும் ஒத்து போகிறது. நிஷாவிற்கு மன்னாரின் மீது ஒரு ஈடுபாடும் தோன்றுகிறது. மற்றொரு சந்தர்ப்பத்தில் மன்னாரின் கடந்தக்காலத்தை பற்றி  நிஷாவிற்கு தெரிய வருகிறது. அதன் பின்னர்தான் கடந்த காலத்தில் அவளையும் அறியாமல் மன்னாருக்கு இழைத்த கொடுமையை அவளால் நினைவுக்கூர முடிகிறது.இறுதியில், மன்னார் நிஷாவை மன்னித்தாரா..? மன்னாரின் உளவு பார்க்கும் வேலையை நிஷா கண்டு பிடித்தாளா...?? நிஷா, மதன் காதல் ஒன்று சேர்ந்ததா என்று திரைப்படத்தில் கண்டு கழிக்கவும்.

இந்த திரைப்படத்தில் ஆரம்பத்தில் இருந்து எனக்கு பிடிக்காத இரண்டு கதாபாத்திரங்கள், இதில் வரும் அந்த மலையாள திரைப்பட தயாரிப்பாளர் தம்பதிகள். ஆனால், இரண்டாம் பாதியில் இவர்கள் கொஞ்சம் கலகலப்பு சேர்த்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் மாதவனுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை. இவருக்கு பதிலாக வேறு ஒருவரை கூட போட்டிருக்கலாம். இரண்டாம் பாதியில் ஆங்காங்கு திரைக்கதையில் தோய்வு ஏற்படுவதை நாம் உணர முடிகிறது. சங்கீதாவிருக்கும் கொஞ்சம் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது, கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார். கமலின் நடிப்பும் அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டும் நகைச்சுவை காட்சிகளும் படத்தின் பலம்.Who is the hero..?? என தொடங்கும் கமலின் அறிமுக பாடலை, அவரின் மகள் ஸ்ருதி ஹாசன் படித்திருந்தால் இன்னும் பொருந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஆனாலும், ஆன்ட்ரியா அவருக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளார். இந்த திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல், நீல வானம் என தொடங்கும் பாடல். அந்த பாடலை காண, கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...மொத்தத்தில், மன் மதன் அம்பு ஒரு முறை பார்க்க ரசிக்க....
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment