நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி...

பொதுவாக பாரதியார் பாடல்களை கேட்கும் போது எனக்குள் ஒரு புத்துணர்வு தோன்றும். ஆனால், இந்த பாடல் மட்டும் வித்தியாசமான ஒரு உணர்வை ஏற்படுத்தும் உள்ளுக்குள். அந்த வகையில்  என்னை மிகவும் பாதித்த பாடல் இது...

பாரதியாரின் மனைவி "செல்லம்மா" எனது ஊரை (கடையம்) சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. :)

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா
தன்னையே சசியென்று சரணம் எய்தினேன்
(நின்னையே)

பொன்னையே நிகர்த்த மேனி, மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே
கண்ணம்மா

(நின்னையே)

மாதர் அம்புகள் என் மீது வாரி வாரி வீச
நீ கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா

(நின்னையே)

யாவுமே சுகம் முனிக்கோர் ஈசனாம் எனக்கு உன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா

(நின்னையே)
                         - பாரதியார்
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment