கவிதை கிறுக்கல்கள்....!!

கனவும்.. நினைவும்...

நேற்று இரவு நான் உன் கனவில்
வந்ததால் என்னவோ...
எனக்கு உறக்கம் இல்லை...!!

கால கடிகாரம்

கால கடிகாரம் வேகமாக சுழல்வதை பற்றி
நான் கவலை கொள்வதில்லை...
ஏனெனில் அதை சூழற்றும் சாட்டை
உன் கைகளில்...!!

அழகான வன்முறை

ஒரு அழகான வன்முறைக்கு தயாராவோமா?
நான் உன் இதயத்தை திருடுகிறேன்...
நீ என் இதயத்தை திருடிகொள்(ல்) ....!!

ஏக்கம்

உனக்காக ஏங்க வேண்டும்
என்ற ஆசையால்...
நீ ஒரு நாளாவது என்னுடன்
தொடர்பு கொள்ளாமலிருக்க எண்ணுகிறேன்...!!

அழையா விருந்தாளி

பிடிக்கவில்லை என்றாய்...
என்னை சந்திப்பதை தவிற்கிறாய் - ஆனால்
என்னுள் மட்டும் ஏன் நொடிக்கு நொடி வருகிறாய்...??
அழையா விருந்தாளியாக....!!

மன மாற்றம்

என் இருண்ட மனதில்
உன்னை குடி வைத்தேன்...
அழைக்கிறார்கள் என்னை - வெள்ளை மனசுக்காரன்
என்று ..!!

மின்சார கண்ணே...

ஒரு நொடியில் தோன்றும்
மின்னலின் மின்சார சக்தியை
கண்டுகொண்டது விஞ்ஞானம்...
நொடிக்கு நொடி துடிக்கும்
உன் கண்களின் மின்சாரத்தை
அறிய வாய்ப்பில்லை....!!

கார் மேகம்

உன் கார்மேக கூந்தலில்
தொலைந்து போனது என் இரவுகள்...
மழை தருமா உன் மேகம்...??

நீ.. நிலா.. நான்...

நீயும் நிலவும் ஒன்று தான்.
அதனால் தான் என்னமோ...
உன்னை சுற்றி நட்சத்திர கூட்டங்களுடன் நான்....!!

ரசிகன்

ரசிகன் இல்லாத அழகு,
நிலவில்லாத வானம்...
ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய்...!!
- இப்படிக்கு நான்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment