நன்றி தோனி!


எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, இரண்டாவது IPL போட்டி தொடங்கும் வரை எனக்கு தோனியை பிடித்திருக்கவில்லை. தோனி சென்னை அணிக்கு அவ்வளவு விலை கொடுத்து வாங்கப்பட்டதையே ஒரு CSK ரசிகனாக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அப்போதெல்லாம் தோனிக்கு அதிக ரசிகர்கள் இருந்தார்கள், முதல் T20 உலகக்கோப்பை வேறு வாங்கிகொடுத்திருந்தார். தற்போது சமூகவலைத்தளங்களில் (முக்கியமாக ட்விட்டர்) சிலர் தோனியை மம்பட்டியான் என்றுதான் நய்யாண்டி செய்கிறார்கள். இதே சிலரை, ஆரம்பகாலத்தில் தோனியின் தீவிர ரசிகர்களாகவும் நான் பார்த்திருக்கிறேன். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் ஆரம்பகாலத்தில் கொண்டாடியபோது நான் தோனியை "மம்பட்டியான்" என்று எனக்குள் கேலி செய்துகொண்டிருந்தேன். நான் மம்பட்டியான் என்று கேலி செய்ததற்கு காரணம் தோனியின் பேட்டிங் ஸ்டைல் களத்துமேட்டில் மண்வெட்டி வைத்து கொத்துவது போல இருக்கும் என்பது மட்டுமே.

அசாருதீன் (மேட்ச் பிக்ஸிங் தவிர்த்து) மற்றும் கங்குலிக்கு பிறகு எனக்கு பிடித்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தான். தோனியின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக பார்த்தபோது, தோனியின் மீது இருந்த மதிப்பு அதிகமாகியது. தானே முன்வந்து தனது கேப்டன் பதவியை இன்று துறந்திருக்கிறார். அணிக்காக தொடர்ந்து விளையாடுவாரா என்று தெரியவில்லை. கங்குலி மற்றும் சச்சின் போல.. சக வீரர்களின் தோளில் அமர்ந்து கிரிக்கெட்டுக்கு "குட் பை" சொல்லும் சூழலில் தோனியை பார்க்கமுடியுமா என்றும் தெரியவில்லை.

Thank you for everything you have done to the Indian Cricket Team 👍
SHARE
    Blogger Comments
    Facebook Comments

1 மறுமொழிகள்: