ஃபாரஸ்ட் கம்ப்


சமீபத்தில் பார்த்து என்னை மனதளவில் பாதித்த திரைப்படம் இது. இந்த திரைப்படத்தை பார்த்து முடிக்கும் போது எனக்கு "அன்பே சிவம்" திரைப்படம் கொடுத்த தாக்கத்தை விட பல மடங்கு அதிகமான தாக்கத்தை கொடுத்தது. Tom Hanks திரைப்படங்களை நான் பார்க்க தொடங்கியது எனது அன்பு சகோதரி Joyce மூலமாகத்தான். அவர் ஒரு Tom Hanks ரசிகை, அதனால் அவர் வசம் பல ஒரிஜிநல் DVDs உள்ளன. அவற்றை கொடுத்து உதவியதற்கு முதலில் நான் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்த வகையில் நான் முதலில் பார்த்த Tom Hanks திரைப்படம் TERMINAL அதன் பிறகு பல Tom Hanks திரைப்படங்களை பார்த்துள்ளேன். அவற்றை பற்றி அடுத்து வரும் பதிவுகளில் எழுதுவேன்.

Forrest Gump திரைப்படம் ஒரு சாதாரண பேருந்து நிறுத்தத்தில் ஆரம்பிக்கிறது. அங்கு அமர்ந்திருக்கும் Forrest Gump தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை அருகில் அமர்ந்திருக்கும் (முன் பின் தெரியாத, அவரை கண்டு கொள்ளாத) பெண்ணிடம் தான் பெட்டியில் இருந்த கடிதத்தை பார்த்தவாறு சொல்ல ஆரம்பிக்கிறார். அவர் அருகில் அமரும் நபர்கள் மட்டும் மாறியவாறு உள்ளனர்.

Gump பிறப்பிலே ஊனமுற்றவன் படிப்பில் மிகவும் சுமாரானவன். அவனால் கால்களில் கவசம் அணியாமல் நடக்க முடியாது. இருந்தாலும் அவனது தாய், அவனுக்கு மிகவும் தன்னம்பிக்கை ஊட்டி ஒரு Public Schoolஇல் சேர்த்து விடுகிறார். ஆனால் பள்ளியின் Principal சுமாராக படிக்கும் ஊனமுற்ற Gumpற்கு ஊனமுற்றோறுக்கான சிறப்பு பள்ளிக்கூடம் தான் சரி வரும் என்று அவனது தாயிடம் சொல்கிறான். மகனின் படிப்புக்காக தனது கற்பையும் அந்த மதி கெட்ட பள்ளியின் Principal இடம் இழக்கிறாள். இத்தனை பிரச்சனைகிடையில் Gump பள்ளிக்கு செல்ல, அந்த பள்ளி பேருந்தில் ஏறும் போது அவனுக்கு யாரும் பக்கத்தில் இருக்க இடம் கொடுப்பதில்லை. அப்போது Jenni என்னும் பெண் மட்டும் அவனுக்கு தன் அருகில் இருக்கும் இடத்தை அளித்து ஆதரவளிக்கிறாள். அன்று முதல் Gumpம் Jenniயும் நண்பர்கள் ஆகிறார்கள். ஒன்றாகவே சுற்றுகிறார்கள் சில இரவுகளில் ஒன்றாகவே தூங்குகிறார்கள். ஆமாம், Jenniஇன் வளர்ப்பு தந்தை ஒருChild Abuser என்பதால் சில இரவுகளில் அவனது தொல்லை தாங்காமல் Gump இன் வீட்டிற்க்கு சுவர் ஏறி குதித்து வந்துவிடுவாள் இரவு நேரங்களில்.

இது இப்படி போக, Gump ஐ அவனுடன் படிக்கும் மாணவர்கள் தினமும் கிண்டலடித்த வண்ணம் இருக்கிறார்கள். ஒரு நாள் அவர்கள் Gump ஐ cycle இல் துரத்த ஆரம்பிக்கிறார்கள். அப்போது Jenni, Gump ஐஅந்த இடத்தில் இருந்து ஓடுமாரு கத்துகிறாள். அப்போது மெல்ல ஓட ஆரம்பிக்கிறான், நேரம் ஆக ஆக வேகமாக ஓட ஆரம்பிக்கிறான். இறுதியில் அவன் ஓடிய வேகத்தில் அவன் காலில் அணித்திருந்த கவசங்கள் எல்லாம் தானாக கழன்று விழுகின்றன. இறுதியில் Jenni இன் உந்துதலால் Gump இன் ஊனம் சரி ஆகிவிடுகிறது. அப்போது முதல் அவன் வாலிப பருவம் வரை அவனது நண்பர்கள் துரத்த ஆரம்பித்தால் அவன் ஓட ஆரம்பித்து விடுவான். என்ன, சின்ன வயதில் cycle இல் தூரத்தியவர்கள் இப்போது அவனை carல் தூரத்துகிறார்கள்.

அவ்வாறு ஒரு நாள் அவர்கள் Gump ஐ துரத்தும் போது அவனை அறியாமல் வேகமாக ஓடி ஒரு Rugby ஆடுகளத்தில் ஓடி விடுகிறான். அந்த விளையாட்டு வீரர்களை விட வேகமா அவன் ஓடுவதை பார்த்து அவனை footbal scholorship அடிப்படையில் Alabaama University இல் சேர்த்துக்கொள்கிறார்கள். அதன் பிறகு Armyஇல் பணி புரிய அவனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ராணுவத்தில் பணிபுரியும் போது அங்கு அவனுக்கு Bubba என்று ஒரு நண்பன் கிடைக்கிறான். Jenni எந்த சந்தர்ப்பத்தில் தோழி ஆனாளோ அதே நிகழ்வினால் தான் Bubbaம் நண்பனாகிரான். ராணுவத்தில் பணி புரியும் போதே service முடிந்ததும் இருவரும் மீன் பிடி வியாபாரம் பண்ண வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். ஒரு முறை  Jenni ஐ Stripper இல் சந்திக்கும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கிறது. அதன் பின் Bubbaம், Gumpம் இருவரும் Vietnam போரில் பங்கேற்க செல்கிறார்கள். அங்கு Lt.Dan அவர்களுக்கு அறிமுகம் ஆகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் எதிரிகளின் தாக்குதலில் அவர்களது படை பலமாக தாக்கபடுகிறது. அப்போது  Bubba, Gump ஐ அங்கிருந்து ஓடுமாறு கத்துகிறான். Gump வழக்கம் போல மிக வேகமாக ஓடி தப்பிக்கிறான். சற்று தொலைவு சென்றபின் தான் அவனுக்கு தனது தோழன் Bubba வை காப்பாற்ற வேண்டும் என்று தோன்றியது. அதன் பின் வந்த இடத்திற்கே ஓடுகிறான். ஆனால் அவனது நண்பனை தேட போய் மற்ற சிலரை அவன் காப்பாற்றுகிறான், அதில் இரண்டு கால்களை இழந்த Lt.Dan ஐ யும் அவர் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் காப்பாற்றுகிறான். இறுதியில் அவனது நண்பன் Bubba ஐ கண்டுகொள்கிறான். ஆனால் அவனை காப்பாற்றமுடியவில்லை.
                                           
 பின்னர் மருத்துவ முகாமில் Lt.Dan உடன் தங்கி அவனும் சிகிச்சை பெற்று கொள்கிறான். சில மாதங்களுக்கு பிறகு ராணுவ முகாமில் அவனுக்கு Table Tennis ஆடும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த விளையாட்டிலும் அவன் சிறந்து விளங்குகிறான். சீன நாட்டை எதிர்த்து விளையாடி வெற்றியும் பெறுகிறான். Table Tennis மூலம் அதிக பெயரை சம்பாதிக்கிறான். பிரபலங்களையும் சந்திக்கிறான். மற்றும்மொறு சந்தர்ப்பத்தில் Jenniஐ சந்திக்கிறான். இரண்டு கால்களை இழந்த Lt.Dan உடன் ஒரு New Year பொழுதை கழிக்கிறான். Lt.Dan அந்த  New Year வரை Gumpஐ போரில்  காப்பாற்றியதற்காக திட்டிக்கொண்டே இருப்பார். ஏனென்றால் இரண்டு கால்களை இழந்து வாழ்வதை விட, போரில் வீர மரணம் அடைவதே மேல் என்பது Lt.Dan ன் எண்ணம். Gump ஒரு கட்டத்தில் ராணுவத்தில் இருந்து வெளி வருகிறான், வந்தவுடன் தனது Table Tennis Paddleஐ வைத்து பணம் சம்பாதிக்கிறான். அந்த பணத்தை வைத்து தனது நண்பன் Bubbaவிற்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி ஒரு படகை வாங்கி மீன் பிடி வியாபாரத்தில் இறங்குகிறான். Lt.Danம் அவனோடு இணைந்து கொள்கிறார். மற்றொரு சந்தர்ப்பத்தில் அந்த மீன் பிடி வியாபாரத்தில் எதிர்பாராதவிதமாக இவர்கள் மிகப்பெரிய வெற்றி பெறுகிறார்கள். அதில் கிடைத்த வருமானதை தனது நண்பன் Bubbaவின் குடும்பத்திற்கும் கொடுத்து உதவுகிறான். அப்போது திடீர் என Gumpன் அம்மா இறந்து விட, தனது மீன் பிடி வியாபாரத்தை Lt.Dan இடம் ஒப்படைத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிடுகிறான்.
                                        
பின்னர் Jenni தனது விபசார தொழிலை விட்டுவிட்டு, Gumpஐ தேடி அவன் வீட்டிற்கு வருகிறாள். சில நாட்கள் அவனுடன் தங்கி இருக்கிறாள். Gump அப்போது தனது காதலை Jenni இடம் சொல்கிறான், அவளை மணந்து கொள்ள விரும்புவதாக கூறுகிறான், ஆனால் அவள் அதனை ஏற்க மறுக்கிறாள். இருந்தாலும் Jenni, Gumpன் மீதுள்ள காதலை நிரூபிக்கும் விதமாய் தன்னையே Gump இடம் அன்று இரவு ஒப்படைத்துவிட்டு அடுத்த நாள் காலையில் யாருக்கும் தெரியாமல் Gump ற்கு ஒரு கடிதத்தை வைத்து விட்டு அங்கிருந்து சென்று விடுகிறாள். அப்போது Gump எங்காவது ஓட வேண்டும் என்று எண்ணுகிறான், அப்போது தொடங்குபவன் தொடர்ந்து 3 வருடங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறான்.
                         
இது TVகளில் காட்டப்பட்டு மறுபடியும் பிரபலமாகிரான். இதை TV இல் பார்த்த Jenni, Gumpஐ சந்திக்க விரும்புவதாய் ஒரு கடிதம் எழுதுகிறாள். இப்போது Gump அந்த பேருந்து நிறுத்தத்தில் Jenni வீட்டிற்க்கு செல்லும் பேருந்திற்காக காத்திற்பதாக கடைசியாக அங்கிருக்கும் பெண்ணிடம் கூறுகின்றான். Jenniஐ அவளது இல்லத்தில் சந்திக்கிறான். அப்போது தான் அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. Jenniற்கு ஒரு பையன் இருக்கிறான் என்றும், அதற்கு தந்தை Gump என்பதும். அப்போது Jenni தனக்கு ஒரு Virus நோய் இருப்பதாகவும், அதற்கு மருந்தில்லாததால் சீக்கிரம் இறந்து விடுவேன் என்றும் கூறுகிறாள். மேலும் Gump இடம் தன்னை மணந்து கொள்ளுவாயா என்றும்  கேட்கிறாள். Gumpம் சம்மதிக்கிறார். இருவருக்கும் மணமான பிறகு கொஞ்ச நாட்களிலாயே Jenni இறந்து விடுகிறாள். அதன் பின் Gump அவனது மகனை வளர்க்க ஆரம்பிற்கிறார்.


இந்த படம் முடியும் போது ஒரு வாழ்க்கையை நாம் முழுமையாக வாழ்ந்து முடித்த அனுபவம் கிடைக்கும். இந்த திரைப்படம் 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment