நான் எனது ஆறாம் வகுப்பு வரை நடனங்களில் அவ்வளவாக ஈர்ப்பு கொண்டதில்லை. எனது ஊரில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் நடன நிகழ்ச்சிகள் நடக்கும் அங்கு சிலவற்றை கண்டுள்ளேன். மேலும், நான் ஆரம்ப பள்ளியில் பயிலும் போது நடன நிகழ்ச்சிகளை பள்ளி ஆண்டு விழாவின் போது கண்டுள்ளேன். இருந்தாலும் நான் "ஜென்டில் மேன்" திரைப்படத்தை பார்த்த பின்னர் தான் நடனத்தில் ஆர்வம் மிகுதியானது. ஆர்வம் என்றால், நான் நடனம்
ஆடுவதற்கு அல்ல, அதனை காண்பதற்கும், ரசிப்பதற்கும் மட்டுமே... :)
"ஜென்டில் மேன்" திரைப்படத்தில் வரும் "சிக்கி புக்கு.. சிக்கு புக்கு..." பாடலில் பிரபு தேவாவின் நடனத்தை பார்த்து ரசித்ததையும், அதனை வீட்டில் தனியே முயற்சி செய்து தோற்றதையும் என்னால் இந்நாள் வரை மறக்க முடியவில்லை. அதன் பிறகு நான் "பிரபு தேவா" நடனத்தின் (நடனத்திற்கு மட்டும்) தீவிர ரசிகன் ஆனேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், எனக்கு "மைக்கேல் ஜாக்சன்" என்பவர் யார் என்று என் கல்லூரி வாழ்க்கை வரை தெரியாது. பெயர் அளவில் மட்டும் அவர் பரிட்சயம், அதனால் அந்த கால கட்டங்களில் நான் "பிரபு தேவாவை" தான் "மைக்கேல் ஜாக்சன்" ஆகா உருவகப்படுத்திக்கொள்வேன்.
பிரபு தேவாவின் பல பாடல்களில் வரும் நடனங்கள் எனக்கு பிடிக்கும், அந்த வகையில் எனக்கு பிடித்த பாடல், "இந்து" திரைப்படத்தில் வரும் இந்த "மெட்ரோ சானல்" பாடல். இந்த பாடலில் பல கடினமான அடிகளை மிக எளிமையாக செய்திருப்பார்.
அந்த நடனத்தை காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.....
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 மறுமொழிகள்:
Post a Comment