முப்பொழுதும் உன் கற்பனைகள் - பாடல்கள்


இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வெளியிடும் முன்பு "ஒரு முறை..." எனத்தொடங்கும்  ஒரே ஒரு பாடலை மட்டும் வெளியிட்டார்கள். அந்த பாடலை வெளியிட்டு கிட்டத்தட்ட இருபது நாட்கள் கழித்து பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு நண்பன் பிரமோத்துடன் செல்லும்பொழுது தான் முதலில் கேட்டேன். அந்த பாடல் ஆரம்பித்த விதமும், பாடலின் வரிகளும் எனக்கு பிடித்திருந்தது. ஆனால் இடையே கலந்து வரும் ராப் (RAP) வரிகள் பாடலின் நளினத்தை கெடுப்பது போல உணர்ந்தேன். எனது நண்பனுக்கும் அதே பீலிங். ஆனால் மீண்டும் மீண்டும் கேட்டதால் ஒரு வழியாக பாடல் பிடித்து விட்டது. இந்த பாடலில் ராப் வரிகள் வருவதாலோ என்னவோ ஆங்கிலத்தில் பாப் ஆல்பம் படிக்கும் ஏகானின் (AKON) ஒரு பாடலை நினைவுபடுத்துகிறது.

இந்த பாடலை கேட்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...

ஒரு முறை...

முதல் பாடல் வெளியிட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதம் கழித்து அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் எனக்கு பிடித்தது ஐந்து பாடல்கள் மட்டுமே. அவற்றில் மிகவும் பிடித்த இரண்டு பாடல்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். முதலாவதாக இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் மேலும் நான் அதிக முறை கேட்டு ரசித்த பாடல் "யார் அவள் யாரோ.." எனத்தொடங்கும் பாடல். இந்த படத்தில் கேட்டவுடன் பிடிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று. கடந்த மூன்று நாட்களாக தான் இந்த பாடல்களை கேட்டுகொண்டிருக்கிறேன். இந்த பாடலை கேட்டபொழுது பல பாடல்கள் நினைவுக்கு வந்தது. கேட்டுப்பார்த்தால் நீங்களும் இதை உணரலாம். இந்த பாடலில் என்னை மிகவும் ஈர்த்த விஷயம் பாடலின் வரிகள். பொதுவாகவே எனக்கு கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு ஈர்ப்பு உண்டு. இந்த பாடலிலும் தனது பேனா மையால் வசியம் செய்கிறார். இந்த பாடலை முகமத் இர்பான் பாடியுள்ளார். மனுஷன் லோ-பிட்ச்ல இந்த பாடலை ஆரம்பித்து ஹை-பிட்ச்ல முடிக்கிறார். பாடலின் வரிகள் சில கீழே... 

ஓர் ஆகாய தூரம்.. நான் போகின்ற போதும்..
என் பக்கத்தில் நிற்பாள் அவள்.
நான் வீழ்கின்ற நேரம்.. பொன் கை ரெண்டும் நீளும்..
தன் கக்கத்தில் வைப்பாள் அவள்.
நான் காலை பனி.. நீ புல்லின் நுனி..
நான் விழாமல் நீ தாங்கினாய்.
நான் கேளா ஒலி.. நீ தானே மொழி..
என் ஓசைக்கு பொருளாகிறாய். 

நான் தூங்காத போதும்.. என் துன்பத்தின் போதும்..
என் அன்னை போல் காத்தாய் என்னை.
பொன் வானெங்கும் நீயே.. வீண்மீனாகின்றாயே...
நான் அண்ணாந்து பார்ப்பேன் உன்னை.
நான் கேட்கும் வரம்.. என் வாழ்நாள் தவம்..
உன் அன்பன்றி வேறேதடி.
ஓ பாரமுகம் நீ காட்டும் கணம்
நான் கூறாமல் சாவேனடி.
 
இந்த பாடலை கேட்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...

யார் அவள் யாரோ..

அடுத்ததாக "கண்கள் நீயே..." எனத்தொடங்கும் பாடல். ரௌத்திரம் திரைப்படத்தில் வரும் "மாலை மங்கும் நேரம்..." பாடலுக்கு அடுத்து பல நாட்கள் கழித்து, பெண் குரலில் வெளிவந்து நான் ரசித்த மெலடி பாடல் இது தான். இந்த பாடலை சித்தாரா என்ற புது முகம் பாடியுள்ளார். இவரது குரல் கர்நாடக சங்கீதத்தில் பல நாட்கள் ஊறிக்கிடந்தது போன்ற ஒரு உணர்வு எனக்குள். இதற்கு முன்பு இவர் பாடிய எந்த பாடலையும் நான் கேட்டதில்லை. இவரின் குரலிலும் ஒரு வசீகரம் தெரிகிறது. இந்த பாடலிலும் தாமரையின் வரிகள் அருமை. பாடலின் சில வரிகள் கீழே... 

முகம் வெள்ளைத்தாள்.. அதில் முத்தத்தால்..
ஒரு வெண்பாவை நான்.. செய்தேன் கண்ணா..
இதழ் எச்சில் நீர்.. என்னும் தீர்த்ததால்..
அதில் திருத்தங்கள்.. நீ செய்தாய் கண்ணா. 

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து..
என்னை தாங்க ஏங்கினேன்.
அடுத்த கனமே குழந்தையாக..
என்றும் இருக்க வேண்டினேன்.

இந்த பாடலை கேட்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...

கண்கள் நீயே...

எனக்கு பிடித்த மற்ற இரண்டு பாடல்களை கேட்க கீழே உள்ள இணைப்புகளை சொடுக்கவும்....

ஓ சுனந்தா...

மழை பொழியும்...

SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment