பாஸ்வேர்டு பத்திரம்

FIREFOX (MOZILA) மென்பொருள், இணையதள பயன்பாட்டிற்காக பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மென்பொருளை GMAIL, IRCTC போன்ற சில முக்கியமான வலைத்தளங்களுக்குள் நுழைய பயன்படுத்தும் போது நாம் தட்டச்சு செய்யும் கடவுச்சொல்லை (Password) சேமித்துக்கொள்ள அனுமதி கோரும் (i.e: Remember Password?). அப்போது அதை அனுமதிக்கும் போது, அடுத்த முறை அதே வலைத்தளத்திற்குள் நுழையும் போது நாம் கடவுச்சொல்லை மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இது இன்டர்நெட் பயன்படுத்தும் பெரும்பால நண்பர்களுக்கு தெரிந்த விஷயம் தான். ஆனால், அந்த password எங்கே எப்படி சேமிக்கப்படுகிறது என்பது சில நண்பர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. IT துறையில் மூன்று வருட அனுபவம் கொண்ட, என்னுடன் பணி புரியும் ஒரு நண்பருக்கே இன்று தான் இந்த விஷயம் தெரிந்தது. அதனால் அதை பற்றிய தகவலை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.

உதாரணமாக GMAIL வலைத்தளத்தில் நுழைய பாஸ்வேர்டை கொடுக்கும் போது * என்கிற குறியீட்டால் நாம் தட்டச்சு செய்யும் எழுத்து மறைக்கப்பட்டு விடும். ஆனால், நாம் தட்டச்சு செய்த உண்மையான எழுத்தை அப்படியே Firefox மென்பொருள் தனக்குள் சேமித்து வைத்துக்கொள்ளும். அது எப்படி சேமிக்கிறது என்பது அந்த மென்பொருளுக்கு தான் வெளிச்சம். இந்த பயன்பாட்டால் அடுத்தமுறை இதே GMAIL வலைத்தளத்திற்குள் நுழைய நாம் கடவுச்சொல்லை மீண்டும் தட்டச்சு செய்யும் நேரம் வேண்டுமானால் குறைக்கப்படும், ஆனால், இதை Browsing Center போன்ற பொது இடங்களிலோ அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கணிப்பொறியிலோ உபயோகிக்கும் போது மற்றவர்களும் நமது கடவுச்சொல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதனால், Firefox மென்பொருளின் இந்த சேவையை சூதானமாக பயன்படுத்தவும்.

மேலும் விபரங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பார்க்கவும்...SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment