எஸ்.ஜே.சூர்யா பற்றி தமிழகத்தின் பெரும்பான்மையான சினிமா ரசிகர்களுக்கு தெரியும். அவரை பற்றிய தனி ஒரு அறிமுகம் தேவையே இல்லை. அவர் கதாநாயகனாக மாறாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக சிறந்த இயக்குனர்களின் வரிசையில் இன்று ஒரு தனி இடத்தை பிடித்திருப்பார். பாவம், "ஹீரோ" ஆசை யாரை விட்டது. கதாநாயகன், அல்லாத இயக்குனராக எனக்கு எஸ்.ஜே.சூர்யாவை மிகவும் பிடிக்கும். அஜித் மற்றும் விஜய் போன்ற இன்றைய காலத்து பெரிய ஹீரோக்களுக்கு "வாலி, குஷி" என்று இரண்டு பெரிய திருப்புமுனை ஹிட் படங்களை கொடுத்தவர். நடிக்கும் ஆசையில் தனது இயக்குனர் திறமையை நாசமாக்கி கொண்டார். வெகுநாட்களுக்கு பிறகு அவரது "இசை" திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இம்முறை படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், கதாநயாகன் போன்றவற்றோடு இசை துறையிலும் புகுந்திருக்கிறார். பார்க்கலாம் இந்த புது அவதாரத்தோடு எப்படி ஜெயிக்க போகிறார் என்று.
இசை படத்தில் எனக்கு பிடித்த பாடல்கள் இரண்டு.
முதலாவதாக, "இசை வீசி..." என தொடங்கும் மெலொடி பாடல். சின்மயியின் குரலில் பாடல் கேட்பதற்கு மென்மையான இருக்கிறது. இது போன்ற மெலொடி பாடல்கள் எல்லாம் படமாக்கப்படும் போது இயக்குனர்கள் கோட்டை விட்டுவிடுவார்கள். அதனாலே, படத்தில் எடுபடாமல் போய்விடும். இந்த பாடல் என்னபாடுபட போகிறதோ?!
அடுத்ததாக, "அதோ வானிலே நிலா..." என தொடங்கும் பாடல். சின்மயி மற்றும் கார்த்திக் குரலில் கேட்பதற்கு பாடல் மிக எளிமையாக இருக்கிறது. பெரிய அளவில் மெனக்கடல் இல்லாமலேயே கேட்டவுடன் பிடிக்கும் விதமாக பாடலை கொடுத்திருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யாவின் குரல் சில நேரங்களில், இசை அமைப்பாளர் தேனிசை தென்றல் தேவாவின் குரலை நினைவுபடுத்துகிறது. மூன்று பாடல்களை தவிர மற்ற பாடல்களில் எல்லாம் தனது தனிமையை பதிவு செய்திருக்கிறார் சூர்யா. கண்டிப்பாக மோசம் என்று சொல்ல முடியாது, அறிமுகப் படத்திற்கு சிறப்பாகவே செய்திருக்கிறார்.
இறுதியாக கீழே உள்ள வீடியோ இணைப்பில், படத்தின் இசை வெளியீட்டில் நடிகர் விஜய் பேசிய வார்த்தைகள் சில,
https://www.youtube.com/watch?v=7oJVcE5WL7Y
ReplyDeleteகில்லி படத்துல வர்ற "ஷாலா லா.." பாட்டு மாதிரி கொஞ்சம் கிளாமர குறைச்சி எடுத்துருக்கலாம்.. ஆனால், இது எஸ்.ஜே.சூர்யா படம், அதனால அதை இங்க எதிர்பார்க்க முடியாது :-)
Delete