நேற்றுதான் இந்த படம் பார்த்தேன்.
கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். இயக்குனர் சசி பற்றிய அறிமுகம் நமக்கு அதிகம் தேவை இல்லை. சும்மா வதவதவென படங்களை எடுத்து தள்ளாமல், 1998ல் இருந்து இதுவரை மொத்தம் ஆறு படங்கள்தான் இயக்கி இருக்கிறார். முதல் படமான "சொல்லாமலே" முதல் இப்போது வந்திருக்கும் "பிச்சைக்காரன்" வரை, காதலை ஒருவித செண்டிமேன்ட்டோடு இவர் கையாளும் விதமும் இவரது கதாநாயகி தேர்வும் எனக்கு பிடிக்கும். இந்த படத்திலும் அது நிகழ தவறவில்லை. படத்தின் தலைப்பை கேட்கும் போது அனிச்சையாக சிரிக்க தோன்றும், ஆனால் இந்த படத்திற்கு இதுவே சரியான தலைப்பு. செண்டிமென்ட், காதல், காமெடி, சமூக பிரச்சனைகள் என அனைத்து ஏரியாக்களையும் கலந்துகட்டி அடித்திருக்கிறார் சசி. முக்கியமாக வசனத்தில் அழுத்தம் தெறிக்கிறது (சில வசனங்களில் "ஆடியன்ஸ்" கைத்தட்ட கூட மறுக்கவில்லை).
முதல் முதலில் "சுக்கிரன்" படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார் விஜய் ஆண்டனி. ஆரம்பத்தில் இவர் படிக்கும் பாடல்களை கேட்கும் போது, எதோ ஒரு பூட்டிய அறைக்குள் இருந்துகொண்டு "முக்கி முக்கி" படிப்பதை போன்ற உணர்வு வரும். ஆனால், போக போக அது பழகிவிட்டது. தற்போது ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு "டப்பிங்" அவரே சுயமாக பேசிக்கொள்கிறார் போல. சில நேரங்களில் அமைதியாக "பன்ச்" அல்லது தத்துவம் சொல்லும்போது "மிர்சி சிவா" டப்பிங் பேசியது போல ஒரு உணர்வு தோன்றி மறைகிறது. விஜய் ஆண்டனி இசைஅமைத்த படங்களில் குறைந்தது இரண்டு பாடல்கள் தேறி விடும். அதே போல இந்த படத்தில் "நெஞ்சோரத்தில்.." எனத்தொடங்கும் பாடல் எனக்கு பிடித்த பாடல்.
விஜய் ஆண்டனி ஹீரோவாக அறிமுகமான முதல் இப்போது வரை, கதை தேர்வு விஷயத்தில் கவனத்துடன் இருந்து வருகிறார். இந்த நிலை தொடரும் பட்சத்தில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் வரிசையில் இடம்பெற வாய்ப்புகள் அதிகம். "நான் கடவுள்" திரைப்படம், ஒரு கோணத்தில் பிச்சைகாரர்களை பற்றி காட்டியது. இந்த படம், முழுக்க முழுக்க இல்லாமல், ஓரளவிற்கு அவர்களது வாழ்க்கை முறை பற்றி காட்டியுள்ளது. படத்தில் சண்டை காட்சிகள் மட்டும் கொஞ்சம் ஓவர் ரகம், மற்றபடி எல்லாம் ஓகே!
டிஸ்கி:
=======
விஜய் ஆண்டனி இசையில் எப்போதும் எனக்கு பிடித்த பாடல், ஒன்று தான். அது 2007ல் விஜய் டிவி யில் ஓடிய "காதலிக்க நேரமில்லை" சீரியலின் "டைட்டில் சாங்" (என்னை தேடி காதல் என்னும் வார்த்தை அனுப்பு..) என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.
0 மறுமொழிகள்:
Post a Comment