சங்கில் கடல் இரையும் சத்தம் கேட்பது எப்படி..?


சங்கு வாங்கும் பொது நாம் பார்த்திருப்போம், பெரும்பாலும் அனைவரும் அதை காதில் வைத்து கடல் இரையும் சதம் வருகிறதா என்று பரிசோதித்து வாங்குவார்கள். அப்படி என்றால், உண்மையில் சங்கில் கடலின் இரைச்சல் சத்தம் கேட்குமா என்ன?. இதற்கு பின்னால் அறிவியல் காரணங்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதிரொலி பற்றி நமக்கு தெரியும், ஒலியின் ஒரு குணமான எதிரொலியின் காரணமாக தான் இந்த சத்தம் கேட்கிறது என்பது தான் உண்மை. காற்றில் எப்பொழுதுமே இது போன்ற எதிரொலிகள் உண்டாகி கொண்டே தான் இருக்கின்றன. ஆனால், அது நம் காதுகளுக்கு கேட்கும் அளவிற்கு உரக்க எழும்புவதில்லை. அப்படி சங்கை காதில் வைத்து கேட்கும் போது காற்றிலுள்ள சில குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட ஓசை அலைகளே எதிரொலிக்கின்றன. எந்த அதிர்வெண் இவ்வாறு பிரதிபலிக்கின்றது என்பது அதற்குள் உள்ள கன அளவை பொறுத்தே அமைகிறது என்பது வேறு விஷயம். இவ்வாறு பிரதிபலிக்கும் ஓசையும் அதே அதிர்வெண்ணில் உள்ள ஓசையும் சேரும் போது இனிய அனுநாதம் உண்டாகி, ஓசையின் தீவிரம் பல மடங்காக அதிகரிக்கும் போது நம் காதுகளால் கேட்க முடிகிறது. இதனால் தான் கடல் இரைச்சல் போன்ற நாதம் சங்கில் கேட்கிறது என்பது உண்மை.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment