அதே பூமி.. அதே பானு...

பொதுவாக பெண் பாடகர்கள் பார்ப்பதற்கு அந்த அளவிற்கு அழகாக இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் குரலை கேட்டால் அதற்கு எதிர்மறையாக இருக்கும். இதில் சில விதிவிலக்கான பாடகர்களும் உண்டு. அந்த வகையில் ஸ்ரேயா கோஷலும் ஒருவர். விருமாண்டி படத்தில் வரும் "உன்ன விட..." பாடலை கேட்ட நாள் முதல் இவரின் குரலிற்கு நான் அடிமை. இவர் ஹிந்தி, தமிழ் , கன்னடம் என்று எல்லா மொழிகளிலும் பாடல்களை பாடியுள்ளார். இவரின் எல்லா பாடல்களையும் பெரும்பாலும் கேட்டு ரசிப்பது எனக்கு வழக்கம். அந்த வகையில் தற்போது அதிகமாக கேட்டு ரசித்து கொண்டிருப்பது கன்னட மொழியில் வெளியான "ஈ பந்தனா" திரைப்படத்தில் வருகின்ற "அதே பூமி.. அதே பானு.." பாடல். இவருடன் சோனு நிகமும் இணைந்து பாடியிருப்பார். சோனு நிகமும் இவருக்கு சளைத்தவர் அல்ல.
சோனு நிகம் பாடிய அனைத்து பாடல்களும் பெரும்பாலும் ஹிட் ஆகிவிடும்.

இந்த பாடலை பார்க்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்....

SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment