சீதா லக்ஷ்மி - பாகம் 8

கடந்த பாகத்தை தவற விட்டவர்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...



பாகம் 8
மூன்று நாட்களுக்கு பிறகு, அலுவலகமே பணி சுமைக்குள் மூழ்கி கிடக்க ரகுவோ சீதாவின் நினைவில் மூழ்கி கிடந்தான். அவள் நினைவென்னும் கார்மேகம் சூழ்ந்ததாலோ என்னவோ ரகுவின் முகத்தில் தாடி பயிர் செழித்து வளர்ந்து நின்றன. அலுவலகத்திற்குள் இருந்ததால் வெளியே மழை மேள தாளத்துடன் வெளுத்து கட்டிகொண்டிருப்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது விழுந்த ஒரு பேரிடியால் அலுவலகத்திற்குள் மின்சாரம் தடைபட்டது. திடீரென போன மின்சாரத்தால் மின் விளக்குகள் பாதிக்கப்பட்டன. ஆனால் கணிப்பொறிகள் மட்டும் இயங்கி கொண்டிருந்தன, சீதாவின் கணிப்பொறியை தவிர. அனைவரின் கணிபொறியும் இயங்க தனது கணிப்பொறி மட்டும் இயங்காமல் போனதால் பதறி போன சீதா, உதவிக்கு சரண்யாவை அழைத்தாள். சரண்யாவும் முயன்று பார்த்தாள், அவளாலும் முடியவில்லை. இதை எல்லாம் அமைதியாக கவனித்துகொண்டிருந்தான் ரகு. இறுதியாக சரண்யா ரகுவை அனுகினாள். "மின்சாரம் தடை பட்டதிலிருந்து சீதாவின் கணினி செயல் படவில்லை கொஞ்சம் என்ன கோளாறுன்னு பார்க்கிறிங்களா?" என்று கேட்டால் சரண்யா. "சீதாவிற்கு இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றால் வந்து பார்கிறேன்" என்றான் ரகு. சீதா மௌனம் காத்தாள். சரண்யா ரகுவிடம் பார்வையால் கெஞ்ச, ரகு தனது இருக்கையில் இருந்து எழுந்து சீதாவின் கணினியை சரி பார்க்க சென்றான். ரகு சீதாவின் கணினி மேலே கை வைக்கவும் மின்சாரம் வரவும் சரியாக இருந்தது. அப்போது தான் ரகு கவனித்தான், கணினிக்கு தடை இல்லாமல் மின்சாரத்தை அளிக்கும் அந்த சாதனத்திற்கும் கணினிக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பது. அதை சரி செய்துவிட்டு கணினிக்கு உயிர் கொடுத்தான் ரகு.

கணிபொறியின் திரையில் கடவுசொல்லை கேட்டவாறு நின்றது. எதோ ஒரு நியாபகத்தில் "பாஸ்வேர்ட்  என்ன?" என்று ரகு கேட்க, "ராம்1996" என்றாள் சீதா. இதை கேட்ட ரகு ஒரு நிமிடம் மனதிற்குள் யோசித்துவிட்டு அதை தட்டச்சு செய்தான். பழைய படி கணினி வேலை செய்ய தொடங்கியது. ரகுவும் சரண்யாவும் அங்கிருந்து தங்களது இருக்கைக்கு சென்று தங்களுக்குள் யோசிக்க தொடங்கினார்கள். சரண்யாவிற்கு அண்ணன், தம்பி யாரும் இல்லை. மேலும் அவளுடைய தந்தையின் பெயரும் ராம் இல்லை, பின்னர் அது யாருடைய பெயராக இருக்கும்? ஏன்  என்று வைத்திருக்கிறாள். என்று பல வழிகளில் யோசிக்க தொடங்கினார்கள். இறுதியில் குழப்பம் மட்டுமே மிஞ்சியது. உடனே இதை சீதாவிடம் கேட்டால் ஏதாவது தப்பாக நினைப்பாளோ என எண்ணி அடுத்த நாள் கேட்கலாம் என் முடிவெடுத்தாள் சரண்யா. மறுபுறம் ரகுவோ மண்டையை பிய்த்து கொண்டிருந்தான். அலுவலகத்தில் யாராவது ராம் என்ற பெயரில் இருக்கிறார்களா என்று விசாரிக்கும் அளவிற்கு சென்றுவிட்டான் ரகு. பெண்கள் பொதுவாக தாங்கள் மிகவும் நேசிக்கும் நபர்களின்  பெயரை தான் கடவுசொல்லாக பயன்படுத்துவார்கள் என்ற எண்ணம் தான் ரகுவின் குழப்பத்திற்கு காரணம்.

அடுத்தநாள் சீதாவும் சரண்யாவும் வழக்கம் போல ரகுவை அழைக்காமல் காபி அருந்த சென்றுவிட்டனர். சரண்யா எப்படியாவது இன்று யார் அந்த ராம் என்று தெரிந்து கொண்டாகவேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தாள். சீதாவிடம் மெல்ல பேச்சு கொடுக்க தொடங்கினாள் சரண்யா. பேச்சுவாக்கில் அப்படியே கேட்டாள் "உங்களுடைய பாஸ்வேர்ட்ல  இருக்கும் ராம் என்ற பெயர் யாருடையது?". சரண்யாவின் மீது சீதா ஒரு வித்தியாசமான பார்வையை வீசினாள். "நீங்கள் எதுவும் வித்தியாசமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாள் மட்டும் சொல்லுங்கள், இல்லை என்றால் வேண்டாம்" என்று அமைதியாக கூறினாள் சரண்யா. சீதா சரண்யாவை நோக்கி ஒரு பெரு மூச்சை விட்டுவிட்டு சொல்ல தொடங்கினாள்.

(பின் தொடருங்கள்...)

டிஸ்கி:
இந்த கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment