காதுகளுக்கு பின்னால் துளசியை ஏன் வைக்கிறார்கள்..?


நாம் கோவில்களில் பார்த்திருப்போம், முக்கியமாக பெருமாள் கோவில்களில் துளசியை காதுகளுக்கு பின்னால் வைத்திருப்பார்கள் பக்தர்கள். இதற்கு இந்து மதத்தில் காலம் காலமாக கடைப்பிடித்து வரப்படும் ஐதீகம் காரணங்களாக இருந்தாலும், இதற்கு பின்னால் அறிவியல் காரணம் இருப்பது பெரும்பாலும் யாருக்கும் தெரியாத விஷயமே. உடலில் மிக அதிகமாக உறிஞ்சும் சக்தியுடையது நமது காதுகளுக்கு பின்புறம் உள்ள பகுதியாகும். துளசியின் மருத்துவ குணம் அனைவரும் அறிந்த விஷயம். அத்தகைய துளசியின் மருத்துவ குணங்கள் காதுகளுக்கு பின்னால் உள்ள பகுதி வழியாக வேகமாக ஊடுருவி செல்லும் என்பதற்காக தான் காதுகளுக்கு பின்னால் துளசியை சூடும் வழக்கத்தை நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தனர். நகரங்களில் இவ்வாறு காதுகளுக்கு பின்னால் வைக்கும் பக்தர்களை பார்ப்பது அறிதாகி விட்டது. ஆனால், கிராமங்களில் இன்னும் இந்த பழக்க வழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

காதுல பூ ஏன் வைக்கிறாங்கன்ணு தெரியல..? ஒரு வேளை பூவில் கூட மருத்துவ  குணங்கள் இருக்குமோ...?
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment