கடையம் - To - பெங்களூரு

வீட்டில் நான்கு சக்கர வாகனம் (Maruti ZEN -2003) வாங்கி கிட்டதட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. கடந்த சனிக்கிழமை சொந்த ஊருக்கு சென்று அதை பெங்களூருக்கு கொண்டுவர முடிவு செய்திருந்தேன். எனக்கு முழுமையாக நான்கு சக்கரவாகனம் ஓட்ட தெரியாது. பத்து நாட்கள், நாள் ஒன்றிற்கு ஒரு மணி நேர வீதம் மொத்தம் பத்து மணி நேரம் வாகனம் ஓட்ட கற்று தரும் பயிற்சி நிறுவனத்தில் படித்தது மட்டுமே கைவசம். இன்னும் பயிற்சி தேவை என்று மட்டும் எனக்கு தெரியும். அதனால் நண்பன் பிரமோத் உதவியுடன் பெங்களூருக்கு கொண்டுவர முடிவு செய்தேன். எனது ஊரில் இருந்து குற்றாலம் வரை சுமார் 20 கிலோ மீட்டர் நான் தான் ஓட்டியாகவேண்டும். ஏனென்றால் எனது நண்பன் அங்கு தான் வசிக்கிறான். சுமார் மதியம் 12.30 மணியளவில் வீட்டில் இருந்து கிளம்பினேன். ஆரம்பமே படுபயங்கரமாக இருந்தது. எங்க ஊரில் இருந்து வெளியே வருவதற்குள் இரண்டு சக்கர வாகனத்தில் வளைவில் வேகமாக வந்த (என்னுடன் பள்ளியில் படித்த  நண்பனின் தம்பி) ஒருவன் எனது வாகனத்தின் மீது மோதிவிட்டான். பின்னர், அவனை மருத்துவமனையில் சேர்த்து விட்டு குற்றாலத்திற்கு வந்து சேர மதியம் 2.30 ஆகி விட்டது. அதன் பின்னர் அங்கிருந்து எனது நண்பன் வண்டியை ஓட்டினான்.

வரும் வழியில் கரூருக்கு அருகில் தாஜ் ஹோட்டலில் இரவு உணவை முடித்துக்கொண்டோம். இந்த ஹோட்டலில் புரோஜெக்டர் மூலமாக திரையில் படம் ஓட்டினார்கள். நாங்கள் செல்லும் போது இளைய தளபதியின் "சுறா" திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.

ஹோட்டலுக்கு வெளியே சிறுவர்கள் விளையாடுவதற்காக ஊஞ்சல் போன்ற மற்ற வசதிகளும் இருந்தன. நான் ஒரு வெங்காய தோசையும், ஒரு பட்டர் சிக்கணும் சாப்பிட்டேன். நண்பன் ஒரு வெங்காய தோசையுடன் முடித்துகொண்டான்.. பட்டர் சிக்கன் சுவையாக இருந்தது. அந்த வழியே வந்தால் முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கும் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

அதன் பிறகு மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம். பெங்களூருக்கு வந்து சேரும் போது அதிகாலை 2 மணி ஆகிவிட்டது. பரவாயில்லை, 23 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைத்தது.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment