Food, Inc.


பொதுவாக திரைஅரங்கங்களில் திரைப்படங்கள் திரை இடுவதற்கு முன்பு சில நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணத்திரைப்படங்கள் போடுவார்கள். நாம் அந்தமாதிரி திரையிடப்படும் ஆவணப்படங்களை பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. ஆனால் [Food, Inc.] இது 93 நிமிடங்கள் ஓடக்கூடிய முழு நீள ஆவணத்திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. எனது முந்தைய அலுவலகத்தில் பணிபுரியும் போது, தம்பி வினோத் கொடுத்த இந்த படத்தை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு இப்பொழுது தான் முழுமையாக பார்த்து முடித்தேன்.


அப்படி என்ன தான் இந்த ஆவணப்படத்தில் இருக்கிறது என்ற நீங்கள் நினைக்கலாம். மனிதன் வாழ்வதற்கு அத்தியாவசமானவை உணவு, உடை மற்றும் இருப்பிடம் ஆகிய மூன்றும் தான். இதில் மிக முக்கியமான ஒன்று உணவு. அப்படி பட்ட உணவு நடைமுறை காலத்தில் எந்த அளவிற்கு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் நம்மை வந்து அடைகிறது என்பதை பற்றி தான் இந்த படம் பேசுகிறது. இந்த திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள விஷயங்கள் வெளிநாட்டில் நடப்பதாக காட்டினாலும், நம் நாட்டிற்கும் இந்த நிலை கூடிய விரைவில் வரலாம்.


நம் நாட்டில் பெரும்பாலும் அசைவ உணவுகள் சமைப்பதற்கு இறைச்சி வகைகள் குறந்த பட்சம் சுத்தமாகவும் உடனுக்குடன் கிடைத்துவிடும். ஆனால் வெளிநாடுகளில் பெரும்பாலும் அவர்கள் இறைச்சி கடைகளுக்கு சென்று வரிசையில் நின்று வாங்குவதில்லை. பல்பொருள் அங்காடிகளில் பதப்படுத்த முறையில் விற்கப்படும் இறைச்சி வகைகளை தான் வாங்கி சமைத்து உண்கிறார்கள். அவ்வாறு பதப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வரும் இறைச்சி எவ்வாறு வளர்க்கப்பட்டு, வெட்டப்பட்டு பதப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வருகிறது என்பதை அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்து காட்டி இருக்கிறார்கள்.


இறைச்சி மட்டுமல்லாது மக்காசோளம், பீன்ஸ் போன்ற தானியங்கள் உற்பத்தி செய்வதில் என்ன கூத்தெல்லாம் நடக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக நமக்கு படம் பிடித்து காட்டி இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை பார்க்கும் நண்பர்கள் KFC, McDonalds போன்ற இடங்களில் உண்பதற்கு கொஞ்சம் யோசிப்பார்கள் என நம்புகிறேன்.


இவ்வாறு கிடைக்கும் உணவினை உண்பதால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி அதனால் பாதிக்கப்பட்டவர்களிடமே நேற்முகம் காண்பதன் மூலமாக நமக்கு விளக்குகிறார்கள். E. coli பற்றி கொஞ்ச நாட்களுக்கு முன்பு சில பேச்சுவார்த்தைகள் அடிபட்டன. அதனை பற்றியும் இந்த படத்தில் பேசி இருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பார்க்கவும்.

படத்தின் முன்னோட்டம் கீழே...

SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment