மனித உண்ணிகள்


ஆட்டை கொன்று மாட்டை கொன்று கடைசியில் மனிதனை கொன்று சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கும்லா மாவட்டத்தில் பில்லி சூனியம் வைத்து மனிதர்களை துன்புறுத்தும் செயலில் ஈடுபட்ட ஐத்வாரி தேவி என்ற நாற்பத்தைந்து வயதுள்ள பெண்ணை கலவரக்காரர்கள் அடித்து கொன்று சமைத்து சாப்பிட்டு விட்டனர். இந்த விஷயம் அவளது பதினாறு வயது மகன் அவத் நாயக் மூலமே காவல்துறைக்கு தெரியவந்தது.

தொழில்நுட்பம் இந்த அளவிற்கு முன்னேறிய காலகட்டத்தில், இன்னும் பில்லி, சூனியம் போன்றவற்றில் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமே...

அது சரி, ஏமாருகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுகிறவன் இருக்கத்தான் செய்வான். இனிமேலாவது இந்த சூனியக்காரர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பார்கள் என நம்புவோமாக.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment