அவன்-இவன்


பாலாவின் படங்கள் என்றாலே எனக்கு எதிர்பார்ப்புகள் உண்டு. சேது திரைப்படத்தை தவிர அவரின் எல்லா திரைப்படங்களையும் முதல் நாளே பார்த்துவிட்டேன். அந்த வரிசையில் இந்த படமும் அடக்கம். நேற்று இரவு தான் இந்த திரைப்படத்தை எனது நண்பன் பிரமோத்துடன் பெங்களூர், தாவேரிகரையில் உள்ள லக்ஷ்மி திரை அரங்கத்தில் பார்த்தேன்.


ஒரு கிராமத்தில் உள்ள திருட்டு குடும்பத்தையும் அந்த ஊரில் வசிக்கும் வாழ்ந்து கெட்ட ஜமீன்தாரையும் பற்றியது தான் இந்த திரைப்படம். படத்தின் ஆரம்பம் முதல் ஆர். கே வின் அறிமுகம் வரை நகைச்சுவை காட்சிகள் தான், என்ன..  ஆங்காங்கே சில இடங்களில் பச்சையான வசனங்களுடன் களைகட்டுகின்றது. ஆர்.கே படத்திற்குள் வந்ததும் நாம் படத்தின் நிறைவுக்கு அருகில் வந்து விட்டோம் என்று யூகிக்க முடிந்தது. இந்த திரைப்படத்திலாவது முடிவு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என் எதிர்பார்த்திருந்தேன், ஆனால் வழக்கம் போலவே இந்த படத்தையும் முடித்து விட்டார். இந்த படத்தில் எனக்கு பிடித்த விஷயம் விஷால் மற்றும் ஜீ.எம்.குமாரின் நடிப்பு. இவர்களின் நடிப்புக்கு இடையில் அனைத்தும் காணாமல் போய்விட்டது. ஆர்யாவின் கதாபாத்திரம் எனக்கு பிதாமகன் படத்தில் வந்த சூர்யாவை நியாபகப்படுத்தியது.


வழக்கமான பாலா திரைப்படங்களில் இருக்கும் கதை, கருத்து என எதையும் எதிர் பார்க்காமல் செல்வது நல்லது. பாலாவின் திரைப்படங்கள் பொதுவாக கிராமத்து மக்களின் இயல்பான வாழ்க்கை முறையையும் உரையாடல்களையும் கொண்டிருக்கும். அது இந்த திரைப்படத்தில் கொஞ்சம் அதிகப்படுத்தியே காட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் காது கொஞ்சம் அதிகமாகவே கூசுகிறது. நான் எதிர்பார்த்து சென்றிருந்த இரண்டு பாடல்கள் படத்தில் இல்லாமல் போனது வருத்தமே.


மொத்தத்தில் அவன்-இவன் ஒரு முறை பார்க்க... ரசிக்க... சிரிக்க... அழுக....

டிஸ்கி:
உலக சினிமா ரசிகர்கள் எல்லாம் தயவு செய்து ஓரம் கட்டிவிடுங்கள்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment