காவலன் பாடல்கள்... ஒரு பார்வை...
"காவலன்" பாடல்களை முதல் முதலில் கேட்ட அனுபவமே ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. சில நாட்களுக்கு முன், நான் உடுமலைபேட்டைக்கு என்னுடன் பணி புறிந்த தோழியின் திருமணத்திற்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். திருமண நிகழ்ச்சி முடிந்ததும் நண்பர்களுடன் "பழநி" கோவிலுக்கு செல்ல ஆயத்தமானேன். என்னுடன் வந்திருந்த தோழியின் உறவுக்காரர் வீட்டிற்கு சென்றுவிட்டு, பின்னர் "பழநி" மலை கோவிலுக்கு சென்று விட்டு இறங்கினோம்.
என்னுடன் வந்திருந்த இன்னொரு நண்பர் "இளைய தளபதி Dr. விஜய்" ன் தீவிர ரசிகர். அவருக்கு, அன்று "ரிலீஸ்" ஆனா "காவலன்" பாடல்களை கேட்க வேண்டும் என்று ஆவல். நானும் இவ்வாறு ஆர்வமாக பாடல் "கேசட்டுகள்" வாங்கிய நாட்கள் உண்டு. நான் கல்லூரியில் பயிலும் போது, பொதுவாக "Harris ஜெயராஜ்" பாடல்கள் வெளி வந்தால், அன்றே சென்று வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தேன். இந்த பழக்கம் எனது நண்பன் "அருண்" இடம் இருந்து எனக்கு தொற்றிக்கொண்டது. எனது நண்பன் அருண், "A.R. ரஹ்மான்" பாடல்களை இவ்வாறு வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தான்.
நானும் என் நண்பர்களும் தோழியின் Carல் தான் கோவிலுக்கு சென்றோம். அதனால் வரும் வழியில் ஒரு CD கடையை பார்த்ததும் வண்டியை நிறுத்தினார். எனது நண்பரும் CD வாங்கும் ஆர்வத்தில் இரண்டு செருப்புகளை கீழே எடுத்து போட்டு கொண்டு அவரும் இறங்கி விட்டார். நாங்கள் வண்டியை கொஞ்சம் தள்ளி நிறுத்துவதற்காக அங்கிருந்து நகர்ந்து விட்டோம். எனது நண்பர் வண்டியில் இருந்து இறங்கிய பின்பு தான் தெரிந்தது, அவர் கீழே போட்ட இரண்டு செருப்புகளில் ஒன்று அவருடையது மற்றொன்று என்னுடையது என்று :) . பிறகு அவர் வேறு வழி இல்லாமல் தனது கைகளிலேயே இரண்டு செருப்புகளையும் எடுத்து கொண்டு CD கடைக்கு சென்று விட்டார் [ இப்போது தெரிகிறதா, எவ்வளவு தீவிர ரசிகர் என்று :) நண்பேன் டா ]. CD கடையில், கைகளில் செருப்புடன் சென்று "காவலன் CD" இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார், அதை பார்த்த கடைக்காரர் மிறண்டே போய் விட்டார். அதன் பிறகு அந்த கடையில் "காவலன் CD" இல்லாததால் நண்பர் வண்டிக்கு திரும்பி கொண்டிருந்தார், நானோ இங்கு என்னுடைய மற்றொரு செருப்பை தேடி கொண்டிருந்தேன் :) . அதன் பிறகு இன்னொரு CD கடையில் சென்று "காவலன் CD" இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார், அந்த கடைக்காரரோ "காவலன் பட CDயா..? இல்லை பாடல்கள் CDயா..?" என்று நண்பரை குழப்பிருக்கிறார். என் நண்பரோ, அதற்குள் காவலன் பட திருட்டு CD "ரிலீஸ்" ஆகிவிட்டதோ என எண்ணி இருக்கிறார், அதன் பிறகு கடைக்காரர் தெளிவாக புறிந்து கொண்டு, காவலன் பாடல்கள் அடங்கிய CDஐ நண்பருக்கு கொடுத்திருக்கிறார். இவ்வாறு பாடல்கள் அடங்கிய CD வாங்கியதே ஒரு மறக்க முடியாத சம்பவமாக அமைந்தது.
சரி, இனி பாடல்களை பற்றி....
எனக்கு "வித்யாசாகர்" இசையில் பிடித்த விஷயங்கள் இரண்டு. ஒன்று, அவர் கொடுக்கும் மென்மையான (Melody) பாடல், மற்றொன்று சோர்ந்து இருப்பவனையும் சரக்கு அடித்தது போல் ஆட வைக்கும் "குத்து" பாடல். இந்த படத்தை பொருத்தவரை, எனக்கு கேட்ட உடன் பிடித்தது, "யார் அது..." என தொடங்கும் மென்மையான பாடல். இந்த பாடலை "கார்த்திக்"கும் "சுஜித்ரா"வும் பாடியுள்ளனர்.
மற்ற பாடல்கள் அந்த அளவுக்கு முதல் முறை கேட்ட உடன் மனதை தொடவில்லை. "விண்ணை காப்பான் ஒருவன்..." என தொடங்கும் பாடல், ஒரு தத்துவ பாடல் போல உள்ளது. இந்த பாடல் "விஜய்"ன் அறிமுக பாடலாக இருக்கும் என்பது என் யூகம்.
அடுத்ததாக "ஸ்டெப் ஸ்டெப்.." என தொடங்கும் பாடல், இந்த பாடலில் "விஜய்" வழக்கம் போல தனது நடன திறமையை வெளிக்காட்ட வாய்ப்புகள் இருக்கிறது.
"சட சடவென..." என தொடங்கும் பாடலும் சரி "பட்டாம் பூச்சிக்கு..." என தொடங்கும் பாடலும் சரி "Late Pickup" ஆகா வாய்ப்புகள் இருக்கிறது.
காவலன் பாடல்களை பொருத்த வரை, படம் வெளிவந்ததும் வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பது என் கணிப்பு. பார்க்கலாம்... அதற்கு முன்னால் பாடல்களை கேளுங்களேன்...!!
0 மறுமொழிகள்:
Post a Comment