"ஹிட்ச்" ஒரு நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். இப்படத்தில் நம்ம "இளைய தளபதி விஜய்" அவர்கள் ஷாஜகான் திரைப்படத்தில் செய்த வேலையை "வில் ஸ்மித்" முழு நேர தொழிலாகவே செய்கிறார். நடை முறை உலகத்தில் காதல் என்பது ஒரு சாதாரண விஷயமாக மாறிவிட்டது. காதலை பற்றி சிந்திக்காத ஆணும் பெண்ணும் இந்த தலைமுறையில் இருக்க வாய்ப்புகள் மிகக்குறைவே (இது எனது சிந்தனை). காதல் என்பதை நான் மூன்று விதமாக பார்க்கிறேன். சொல்லாத காதல், இரு புறமும் பகிர்ந்து கொள்ளப்பட்ட முழுமையான காதல், ஒரு தலை காதல்.

முதலில் காதல், ஒரு தலை காதலாக ஆரம்பிக்கும், அதன் பிறகு காதலை பரிமாறிய பின், அது ஒத்துக்கொள்ளப்பட்டால் முழுமையான காதல் ஆகிறது. இல்லை என்றால், அது ஒரு தலை காதலாகவே இருக்கிறது. இந்த படத்தில் "வில் ஸ்மித்" காதலில் ஆண்கள் வெற்றி பெற எல்லா உதவிகளும் செய்கிறார். காதலில் கரை தேற துடிக்கும் எல்லா நண்பர்களுக்கும் இந்த படத்தை நான் பரிந்துரை செய்கிறேன். :)

படத்தின் ஒரு வரி கதையை நான் முன் பதியில் சொல்லிவிட்டேன். "ஆலெக்ஸ் ஹிட்சென்ஸ்" (வில் ஸ்மித்) சம்பளம் வாங்கிக்கொண்டு காதலர்களை சேர்த்து வைப்பதில் பயிற்சி அளித்து உதவுகிறார். ஹிட்ச், அவ்வாறு பயிற்சி அளிக்கும் ஒரு வாடிக்கையாளர் தான் ஆல்பர்ட் பிரெண்னமான் (கெவின் ஜேம்ஸ்). ஆல்பர்ட், அவரது அலுவலகத்தில் பெரிய பொறுப்பில் இருக்கும் அல்லேக்ரா கோல் (ஆம்பர் வல்லேட்டா) மீது காதல் கொள்கிறான். ஆனால் தனது காதலை பரிமாறிக்கொள்ள தெரியாமல் ஹிட்ச்ன் உதவியை நாடுகிறான். ஹிட்ச்ம் அதற்கு உதவுகிறான்.
இந்நிலையில் ஹிட்ச்ம், சாரா (ஈவா மென்டிஸ்) மீது காதல் கொள்கிறார். சாரா ஒரு பத்திரிக்கையில் கிசுகிசுக்கள் பக்கத்தின் தொகுப்பாளராக இருக்கிறாள். சாரா, சம்பளத்திற்கு காதலை சேர்த்து வைக்கும் அந்த நபரை பத்திரிக்கையின் மூலம் தோளுறித்து காட்டும் முயற்சியில் இறங்குகிறாள். ஆனால் சாராவிற்கு, அது "ஹிட்ச்" தான் என்று அப்போது தெரிவதில்லை.
இறுதியில் ஆல்பர்ட்ம் அல்லேக்ராவும் சேர்ந்தார்களா...?, ஹிட்ச் சாராவிடம் அகப்பட்டானா...?, ஹிட்ச், சாராவின் காதல் நிறைவேறியதா...? என்பதை நீங்களே திரைப்படத்தில் கண்டுகளியுங்கள்.
எனது யூகம் சரியாக இருந்தால் "மன்மதன் அன்பு" திரைப்படம் இந்த திரைப்படத்தின் தழுவலாகத்தான் இருக்கும் :) (இல்லாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது)
0 மறுமொழிகள்:
Post a Comment