"G2" இல்லை... இல்லை... "CO2"
மூன்று வருடங்களுக்கு பிறகு இப்போது தான் பெங்களூர் நகர பேருந்தில் அலுவலகத்திற்கு செல்லும் வாய்ப்பு [என் நிலைமை அப்படி ஆகிவிட்டது, அது பற்றி மற்றொரு பதிவில் எழுதுகிறேன்] கிடைத்திருக்கிறது. எனது அலுவலகத்திற்கு செல்ல "G2" பேருந்தை நான் "மடிவாலா மார்க்கெட்டிற்கு" நடந்தே சென்று பிடிக்கவேண்டும். இது ஒரு வகையில் நல்ல விஷயம் தான், காலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை
[Ohh.. Now you know the secret of my 6 packs ;) ]. ஓகே.. ஓகே... உங்க "மைண்ட் வாய்ச" நான் "Catch" பண்ணிட்டேன், அதனால இங்கயே நிப்பாட்டிகிறேன்.
சரி நம்ம விஷயதிற்கு வருவோம், இந்த "G2" பேருந்து "ப்ரிகேட் ரோட்" ல இருந்து "எலெக்ட்ரானிக் சிட்டி" வரைக்கும் செல்கிறது. இதில் காலையில் ஏறும் போது முகத்தை [முக்கியமா மூக்கையும் கவர் பண்ணுற மாதிரி...] நல்லா மூடின பிறகு ஏறுவது நல்லதுன்னு நினைக்கிறேன். காலை நேரம் என்பதால் என்னவோ, பேருந்தில் ஆங்காங்கு "CO2 Bomb" விழுந்து கொண்டே இருக்கும். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எனக்கு "பிதாமகன்" படத்தில் சூர்யா லேகியம் விற்கும் காட்சி தான் நியாபகத்திற்கு வருகிறது. இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், ஜன்னல் ஓரத்தில் இருப்பவர்கள் அதன் கதுவுகளை திறப்பதிலை [ஏன் என்றால் பனிக்காற்று அதிகமாக இருக்கும்].
இதற்காக தான் என்னவோ, இந்த பேருந்தில் "Top Opener" ஒன்று உள்ளது. இந்த "Top Opener" மூடி இருக்கும் பட்சத்தில், உள்ளே தேங்கி நிற்கும் காற்று வெளியேறுவதற்கு அடுத்த நிறுத்தம் வரை காத்திருக்க வேண்டும். ஏனென்றால், அப்போது தான் வாசல் கதவை திறக்கிறார்கள். என்ன கொடுமை சார் இது.... :(
டிஸ்கி:
நம்ம ஊர்களில், மூனு பத்து ரூபாய் என்று பேருந்து நிலையத்தில் கைக்குட்டை விற்பவர்கள் இந்த "G2" பேருந்தை குத்தகைக்கு எடுத்தால், நல்ல வருமானம் பெற வாய்ப்புகள் இருக்கிறது.
0 மறுமொழிகள்:
Post a Comment