வெப்பம் - பாடல்கள்

வெப்பம் திரைப்படத்தின் பாடல்கள் வெளிவந்து பல நாட்கள் ஆகிவிட்டன. இருந்தாலும் இப்பொழுது தான் கொஞ்ச கொஞ்சமாக இத்திரைப்படத்தின் பாடல்கள் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக இரண்டு பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தது. அவை "காற்றில் ஈரம்..." மற்றும் "மழை வரும் அறிகுறி..." என தொடங்கும் பாடல்கள். இந்த இரண்டு பாடல்களும் மென்மையான பாடல்கள். மற்ற பாடல்கள் ஏனோ அந்த அளவிற்கு மனதோடு ஒட்டவில்லை. ஜோஷ்வா ஸ்ரீதர் இசையில் வெளிவந்த காதல் மற்றும் கல்லூரி திரைப்பட பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.


"காற்றில் ஈரம்..." என தொடங்கும் பாடலை கார்த்திக் மற்றும் ஸ்ரீசரண் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலை கேட்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

காற்றில் ஈரம்...

மழை வரும் அறிகுறி... என தொடங்கும் பாடல் இரண்டு பதிப்பாக வந்துள்ளது. பெண் குரலில் வந்துள்ள பதிப்பை சுஸேனும் (Suzanne), ஆண் குரலில் வெளிவந்துள்ள பதிப்பை நரேஸ் ஐயரும் பாடியுள்ளார். எனக்கு பெண் குரலில் உள்ள பாடல் தான் பிடித்திருக்கிறது. பாடல் வரிகள் கீழே... 

மழை வரும் அறிகுறி,
என் விழிகளில் தெரியுதே..
மனம் இன்று நனையுதே,
இது என்ன காதலா ? சாதலா?
பழகிய காலங்கள்,
என் பார்வையில் விரியுதே..
பாதைகள் நழுவுதே,
இது ஏனோ? ஏனோ?

உன் தோளில் சாயும்போது,
உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது..
உன்னோடு போகும் போது,
பூ பூக்கும் சாலையாவும்,
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே...

மழை வரும் அறிகுறி,
என் விழிகளில் தெரியுதே.....

அறியாதொரு வயதில் விதைத்தது…
அதுவாகவே தானாய் வளர்ந்தது…
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில்..ஒஹூோ ஓ ஓ ஒஹூோ ஓ
அட யாரதை யாரதை பறித்ததோ?  ஒஹூோ ஓ .

உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே,
அது பாதியில் தொலைந்ததடா...

நான் கேட்டது அழகிய நேரங்கள் ஒஹூோ ஓ ஓ ஒஹூோ ஓ
யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ஒஹூோ ஓ
நான் கேட்டது வானவில் மாயங்கள் ஒஹூோ ஓ ஓ ஒஹூோ ஓ
யார் தந்தது வழிகளில் காயங்கள் ஒஹூோ ஓ

இந்த காதலும் ஒரு வகை சித்திரவதைத்தானே
அது உயிருடன் எரிக்குதடா... ஒஹூோ ஓ... ஒஹூோ ஓ.. ஒஹூோ ஓ...

மழை வரும் அறிகுறி,
என் விழிகளில் தெரியுதே.....

இந்த பாடலை கேட்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

மழை வரும் அறிகுறி...

SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment