தேநீர் விடுதி - பாடல்கள்

நேற்று தான் இந்த திரைப்படத்தின் பாடல்களை கேட்டேன். இந்த திரைப்படத்தின் இசை அமைப்பாளர் S.S.குமரன். இவரது இசையில் வெளிவந்த களவானி திரைப்படத்தின் பாடல்கள் எனக்கு பிடித்திருந்தது. பூ திரைப்படத்திற்கும் இவர் தான் இசை. தேநீர் விடுதி திரைப்படத்தின் இசை அமைப்பாளர் மட்டுமல்லாது, இந்த திரைப்படத்தின் இயக்குநரும் இவர் தான். எனக்கு இந்த திரைப்படத்தில் மூன்று பாடல்கள் பிடித்திருந்தது. அவற்றை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


முதலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் "ஒரு மாலை..." எனத் தொடங்கும் பாடல். மென்மையாக மனதை வருடும் பாடல். இந்த பாடலை சோனா மொஹபத்ரா பாடியுள்ளார். இவரது குரல் எனக்கு சாதனா சர்கம் குரலை நியாபக படுத்துகிறது. இந்த பாடலை கேட்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

ஒரு மாலை...


அடுத்ததாக, "மெல்லென சிரிப்பாளோ..." எனத்தொடங்கும் பாடல். இந்த பாடலை கௌசிக் மற்றும் மிருதுளா இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலும் ஒரு மென்மையான பாடல்தான். இந்த பாடல் காளவானி திரைப்படத்தில் வரும் "ஒரு முறை..." பாடலை நியாபகப்படுத்தியது. இந்த பாடலை கேட்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

மெல்லென சிரிப்பாளோ...


இறுதியாக, "என்னவோ பண்ணுது..." எனத்தொடங்கும் பாடல். கொஞ்சம் துள்ளல், கொஞ்சம் மென்மை என இரண்டையும் கலந்து கொடுத்துள்ளார் இந்த பாடலில். இந்த பாடலை S.S.குமரன் மற்றும் சின்மயி இணைந்து பாடியுள்ளனர். பாடலின் பின்னணியில் வரும் மழலைகளின் "கோரஸ்" எனக்கு பிடித்திருந்தது. இந்த பாடலை கேட்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

என்னவோ பண்ணுது... 


டிஸ்கி:
இந்த திரைப்படத்தின் கதாநாயகியை எனக்கு என்னவோ ரொம்ப பிடித்துவிட்டது. 


"மெல்லென சிரிப்பாளோ...?
ஜில்லென முறைப்பாளோ...?
என் கண்ணை இமை தின்றதே...!
கண்ணுக்குள் விழுந்தாளோ...?
கல்லுக்குள் முளைத்தாளோ...?
என் நெஞ்சம் என்னை மென்றதே...!!!"
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment