கவிதை கிறுக்கல்கள்....!!

உயிரோடு ஒரு கவிதை


தொலைவான தருணங்களில்,
மழையாய் தோன்றும் கவிதைகள்,
வார்த்தை பஞ்சத்தில் வர மறுக்க,
உன் அருகாமை மூல காரணம்...

உன் கூந்தலென்னும் தூரிகையால்,
கருவிழியின் மை தொட்டு,
உன் இதழ் வரிகளில்,
கவிதை புனைய - வர மறுக்குமோ
வார்த்தை வெள்ளம்....

உயிருள்ள கவிதையோடு,
இருப்பதாலோ என்னவோ...
உயிரற்ற கவிதை எழுத
வார்த்தை பஞ்சம் எனக்குள்...

அது சரி...
கவிதையோடு இருக்கும் போது,
யாராவது கவிதை எழுதுவார்களா என்ன....?

SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment