10 Things I Hate About You


இந்த திரைப்படத்தை நண்பர் ஒருவரிடம் இருந்து பலநாட்களுக்கு முன்பே வாங்கி வைத்திருந்தேன். இன்று தான் பார்ப்பதற்கு நேரம் கிடைத்தது. இந்த திரைப்படம் ஷேக்ஸ்பியரின் "The Taming of the Shrew" நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இது ஒரு நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம்.


கேமரான்(Gordon-Levitt) ஒரு பள்ளியில் புதிதாக வந்து சேர்கிறான். சேர்ந்த முதல் நாளே அவன் பார்க்கும் பியாங்கா(Larisa Oleynik) மீது காதல் கொள்கிறான். கேமரானின் நண்பன் மைக்கேல் அவளையும், அவளது குடும்பத்தை பற்றியும் சொல்கிறான். அதாவது, பியாங்காவிற்கு ஒரு சகோதரி இருக்கிறாள் என்றும், அவள் பியாங்கா போல இல்லாமல் மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருக்கிறாள் என்றும் கூறுகிறான். இது போக, அவளது அப்பா கொஞ்சம் கண்டிப்பானவர் என்றும், பியாங்காவின் அக்கா கேட்(Julia Stiles) எப்போது ஒரு பையனுடன் தனியே ஊர் சுற்ற ஆரம்பிக்கிறாளோ அப்போது தான் உன்னையும் ஊர் சுற்ற அனுமதிப்பேன் என்று வித்தியாசமான கட்டளை இட்டிருக்கிறார் [வெளிநாட்டில் இருக்கும் அப்பாக்கள் எல்லாம் இப்படி தான் இருப்பாங்களோ...?] என்றும் கூறுகிறான். மேலும் தற்சமயம் பியாங்கா தனக்கு பிரென்ச் மொழி காற்று தர ஒரு நபரை தேடி கொண்டிருப்பதாகவும் சொல்கிறான் மைக்கேல்.


கேமரான் எப்படியாவது பியாங்காவின் காதலை பெற பிரென்ச் மொழி கற்றுக்கொண்டு அவளுக்கு சொல்லி கொடுக்க ஆரம்பிக்கிறான். முதல் நாளே தன்னுடன் வெளியே வருமாறு அழைக்கிறான். அவள் உண்மையான நிலவரத்தை சொல்கிறாள். பின்னர் கேமரான் எப்படியாவது அவளது சகோதரி கேட்டிற்கு ஒரு துணையை சேர்த்துவிட்டால் தனது பிரச்சனை சரியாகிவிடும் என நினைத்து அதே பள்ளியில் படிக்கும் பேட்ரிக்(Heath Ledger) உதவியை நாடுகிறார்கள். ஆனால், பேட்ரிக்கும் கேட் மாதிரியே வித்தியாசமான கதாபாத்திரம். அவனது நடவடிக்கையை பார்த்துவிட்டு மிரண்டு ஓடி விடுகிறான் கேமரான். அதன் பின்னர் ஜோய்(Andrew Keegan) என்பவனின் உதவியை நாடுகிறான் கேமரான். ஜோய் ஏற்கனவே பியாங்காவிற்கு ரூட் விட்டு கொண்டிருப்பவன். ஜோய் ஒரு வழியாக பேட்ரிக்கிற்கு பணம் கொடுத்து இந்த காரியத்திற்கு சம்மதிக்க வைக்கிறான்.


பேட்ரிக் சில முறை கேட் மனதை கவர முயற்சி செய்து பார்க்கிறான். ஆனால், அவனால் முடியவில்லை. இந்நிலையில் இவர்களுடன் பயிலும் நண்பன் ஒருவன் கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்ள தனது சகோதரிக்காக செல்கிறாள் கேட். அங்கே தவிர்க்க முடியாத சந்தர்ப்ப சூழ்நிலையால் பேட்ரிக்குடன் பழக வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது தொடர இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். அதே விருந்தில், கேமரானை தவிர்த்து விட்டு பியாங்கா, ஜோயிடன் சேர்ந்து சுற்றுக்கிறாள். இதனால் மனமுடைந்து போகிறான் கேமரான். ஆனால், விருந்தின் இறுதியில் ஜோய், பியாங்காவை கழட்டி விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் சென்று விடுகிறான். இதனால், கேமரான் பியாங்காவிற்கு மீண்டும் நெருக்கமாகிறான்.


இது இப்படி போக, மற்றொரு நாள் இது போல ஒரு விருந்தில் பங்கேற்க பியாங்கா கேட்டிற்கு அழைப்பு விடுக்கிறாள். கேட் அப்போது தனக்கும் பேட்ரிக்கிற்கும் இருந்த சின்ன மனஸ்தாபதால் வரமுடியாது என்கிறாள். அதன் பின்னர் ஒரு வழியாக செல்ல சம்மதிக்கிறாள். அவள் சம்மதிப்பதர்க்கு முன்பு தான் தனது கடந்த கால வாழ்க்கை பற்றி சொல்கிறாள். அதில் தான் ஜோய்யை காதலித்ததாகவும் அதற்கு பிறகு ஜோய் தன்னை ஏமாற்றியது பற்றியும் கூறுகிறாள். இவர்களது வீட்டிற்கு வந்து கேமரான் பியாங்காவையும், பேட்ரிக் கேட்டையும் அந்த விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்து செல்கின்றனர். இவர்கள் சென்ற பின்னர், அங்கே ஜோய்  பியாங்காவை அதே விருந்திற்கு அழைத்து செல்ல வருகிறான்.


ஏமாந்து போன ஜோய், அதே விருந்திற்கு வேறொரு பெண்ணுடன் செல்கிறான். அங்கே கேட் முன்னால், தான் பணம் கொடுத்து நடிக்க வைத்த ஆள் தான் பேட்ரிக் என்ற உண்மையை சொல்கிறான். இதன் பின்னர் என்ன நடந்தது என்பதை திரைப்படத்தில் கண்டு மகிழுங்கள்.

இந்த திரைப்படத்தில் வரும் ஒரு பாடல் எனக்கு பிடித்திருந்தது. இந்த பாடல் முழுமையாக படத்தில் வரவில்லை. பாடலை கேட்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.



டிஸ்கி:
பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் இந்த திரைப்படத்தை பரிந்துரை செய்கிறேன்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment