அவன் இவன் - பாடல்கள்


நான் கடவுள் என்ற பிரம்மிக்க வைத்த படைப்புக்கு பிறகு பாலாவின் அடுத்த படைப்பாக வர இருப்பது தான் அவன் - இவன். இந்த திரைப்படத்தின் பாடல்களை இன்று தான் முதல் முதலில் கேட்டேன். நந்தா திரைப்படத்திற்கு பிறகு யுவன் சங்கர் ராஜா பாலாவுடன் இணைந்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் என் மனதை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக, அவன பத்தி நான் பாட போறேன்... மற்றும் டையோ டையோ டோலீ... என தொடங்கும் இரண்டு பாடல்களும் ஒரு கோவில் திருவிழாவிற்குள் சென்று வந்த உணர்வை கொடுத்தது.

அவன பத்தி நான் பாட போறேன்... என தொடங்கும் பாடலை T.L.மஹாராஜன் மற்றும் சத்தியன் இணைந்து பாடியுள்ளனர். வெகுநாட்களுக்கு பிறகு T.L.மஹாராஜனின் குரலை கேட்பது ஒரு விதமான புத்துணர்வை இந்த பாடலுக்கு கொடுக்கிறது.

டையோ டையோ டோலீ... என தொடங்கும் பாடலை சுஜித்ரா பாடியுள்ளார். இந்த பாடலில் இவருக்கு வேலை மிகக்குறைவே. இசை மட்டும் தான் இந்த பாடல் முழுவதையும் ஆட்கொள்கிறது.

முதல் முறை... என தொடங்கும் பாடலை விஜய் பிரகாஷ் பாடியுள்ளார். இது ஒரு சிறிய சோகம் தழுவிய மென்மையான பாடல். இந்த பாடலின் வரிகள் எனக்கு பிடித்திருந்தது.

ஒரு மலையோரம்... என தொடங்கும் பாடலை விஜய் யேசுதாஸ், பேபி பிரியங்கா, பேபி ஸ்ரீநிசா மற்றும் பேபி நித்தியஸ்ரீ ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இது ஒரு மனதை வருடும் மென்மையான பாடல்.

இறுதியாக, ராசாத்தி...  என தொடங்கும் பாடல். இந்த பாடலை ஹரிசரண் பாடியுள்ளார். இந்த பாடல் ராவணன் படத்தில் வருகின்ற "காட்டு சிறுக்கி" பாடலை கொஞ்சம் நியாபகபடுத்துகிறது.

பாடல்களை கேட்க கீழே உள்ள இணைப்புகளை சொடுக்கவும்....

ஒரு மலையோரம்...

அவன பத்தி நான் பாட போறேன்...

டையோ டையோ டோலீ...

முதல் முறை...

ராசாத்தி...

SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment