கோதாவரி


தமிழ் திரைப்படங்களுக்கு அடுத்த படியாக நான் மிகவும் விரும்பி பார்ப்பது தெலுங்கு திரைப்படங்கள் தான். பெரும்பான்மையான தெலுங்கு படங்கள் மிகவும் கலர்ஃபுல்லாக இருப்பதுவும் அதற்கு ஒரு காரணம். அதுவும் படத்தில் கண்டிப்பாக சிவப்பு நிறம் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். மென்மையான காதல் படங்களில் கூட, முடிக்கும் போதாவது கொஞ்சம் ரத்தத்தை காட்டி வன்முறையை சேர்த்திருப்பார்கள். அப்படிப்பட்ட படங்களுக்கு நடுவில் வன்முறை மற்றும் ஆபாசம் இல்லாத திரைப்படங்கள் எடுத்து நன்மதிப்பு பெற்றவர் இயக்குனர் சேகர் கம்முள்ளா. இவர் திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்பு பொலாரிஸ் (Polaris) நிறுவனத்தில் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடதக்கது. சரி இனி படத்தை பற்றி பார்ப்போம்...


இந்த திரைப்படம் 2006ஆம் ஆண்டு வெளிவந்தது. அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் சேர விண்ணப்பிக்கிறவன் தான் ஸ்ரீராம் (சுமந்த்). இவர் தனது முறைப்பெண்ணான ராஜி (நீது சந்திரா) யை காதலிக்கிறார். ஆனால், ராஜியின் அப்பா அதனை ஏற்க மறுத்துவிட்டு ஒரு IPS மாப்பிள்ளைக்கு ராஜியை நிச்சயம் செய்துவிடுகிறார். இதற்கு காரணம் ஸ்ரீராம் வசதியிலும் அந்தஸ்திலும் அவர்களை விட குறைவு என்பது தான். 


சீதா மஹாலக்ஷ்மி (கமலினி முகர்ஜி) சொந்தமாக ஆடை அலங்காரம் செய்யும் கடையை நடத்தி வருபவள். வீட்டில் இவளை திருமணத்திற்கு நெருக்குகிறார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் தப்பி விடுகிறாள். இவர்களது தொல்லையில் இருந்து தற்காலிகமாக தப்பிக்க பத்திராசலம் கோவிலுக்கு செல்ல முடிவெடுக்கிறாள்.


இந்த சமயத்தில் ராஜியின் திருமணத்தை நடத்த கோதாவரி ஆற்றில் படகு சவாரி மூலம் பத்திராசலம் செல்ல முடிவெடுக்கின்றனர் ராஜியின் குடும்பத்தார். ராஜியின் வற்புறுத்தலுக்கு பிறகு ஸ்ரீராம் அவர்களுடன் செல்ல ஒப்பு கொள்கிறான். இதன் பிறகு படத்தின் இறுதி காட்சிக்கு முன்பு வரை நிகழும் சம்பவங்கள் எல்லாம் இந்த படகு பயணித்தில் தான் நகர்கிறது. முதல் சந்திப்பில் முட்டிக்கொள்ளும் ஸ்ரீராம் மற்றும் சீதா, போக போக ராசியாகி ஒருவருக்கொருவர் உள்ளுக்குள்ளே காதலிக்க தொடங்குகின்றனர். இதனை மிக இயல்பாக காட்டியிருப்பார் படத்தின் இயக்குனர். இந்நிலையில், மணப்பெண் ராஜி, ஸ்ரீராம் மீது மெல்ல காதல் வயப்படுகிறாள். இறுதியில், ஸ்ரீராம் மற்றும் சீதா காதல் ஒன்று கூடியதா என்பதை திரைப்படத்தில் கண்டுகளியுங்கள்.


இந்த திரைப்படத்தில் கமலினி முகர்ஜியின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது, ஒரு பெண்மைக்கு உண்டான அனைத்து இயல்புகளையும் தனது இயல்பான நடிப்பால் வெளிக்காட்டியிருப்பார். மேலும், படத்தில் வரும் அந்தங்கா லேனா என்னும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த பாடலை காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும். டிஸ்கி1:
தெலுங்கில் வெளிவந்து சக்கை போடு போட்ட ஹேப்பி டேஸ் (Happy Days) திரைப்படத்தை இயக்கியதும் சேகர் தான். முதல் படமான டாலர் டிரீம்ஸ் (Doller Dreams) இவருக்கு தேசிய விருதை பெற்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

டிஸ்கி2:
முழூ திரைப்படத்தையும் காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment