ஒரு சராசரி நான்கு சக்கர வாகன ஓட்டுனருக்கும், எரி பொருளை ஏற்றி செல்லும் மிக பெரிய கனரக வாகனத்திற்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் இந்த திரைப்படம். ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரான "ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்" இயக்கத்தில் 1971ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் இது.
டேவிட் மேன் (Dennis Weaver) தனது வேலை விஷயமாக கலிஃபோர்னியாவின் வரண்ட பகுதியை ஒட்டிய நெடுஞ்சாலையில் தனது நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்கிறான். அதே சாலையில் அவனது வாகனத்திற்கு முன்னால் ஒரு மிகப்பெரிய எரி பொருளை ஏற்றி செல்லும் கனரக வாகனம் மிக மெதுவாக செல்கிறது. பல முறை ஒலி எழுப்பி ஒரு வழியாக அந்த வாகனத்தை முந்தி செல்கிறான். ஆனால், சில நொடிகளில் அந்த மிகப்பெரிய வாகனம் பலத்த இரைச்சலுடன் டேவிட்டின் வாகனத்தை முந்தி செல்கிறது. இதன் பிறகு தொடர்ந்து டேவிட்டின் வாகனத்திற்கு வழி கொடுக்காமல் டேவிட்டை சோதனைக்குள்ளாக்கிறான் அந்த பேருந்தின் ஓட்டுனர். அது மட்டுமல்லாமல் டேவிட்டை அவன் போகும் இடமெல்லாம் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறான்.
இறுதியில் அந்த மன நிலை பாதிக்கப்பட்ட ஓட்டுனரிடம் இருந்து எப்படி டேவிட் தப்பித்தான் என்பது தான் திரைப்படம். இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை மட்டும் வைத்து கொண்டு திரைக்கதையை மிக சுவாரசியமாக நகர்த்தியிருப்பார் ஸ்பீல்பெர்க்.
டிஸ்கி:
அந்த கனரக வாகனத்தை ஓட்டும் நபரின் முகத்தை, கடைசி வரை காண்பிக்காமலே படத்தை முடித்து விட்டார்கள்.
0 மறுமொழிகள்:
Post a Comment