சேட்டன் பகத் எழுத்தில் வெகு நாட்களுக்கு முன் வெளிவந்த புத்தகம் தான் 2 STATES. சுமார் 270 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை பெங்களூரு பிளாட்பாரத்தில் 40 ரூபாய் கொடுத்து வாங்கினேன். இதன் அசல் விலை 95 ரூபாய் மட்டுமே. பல இடங்களில் இந்த புத்தகத்தை நான் பார்த்திருக்கிறேன். அலுவலகத்தில் சிலபேர் படித்து பார்த்திருக்கிறேன், பேருந்தில் பயணம் செய்யும் போது சிலபேர் படித்து பார்த்திருக்கிறேன். சரி, அப்படி என்ன தான் இந்த சிகப்பு அட்டை போட்ட புத்தகத்தில் உள்ளது என்று ஒரு ஆவலில் தான் இதை வாங்கினேன்.
இந்த புத்தகத்தில் வரும் கதை என்னவென்றால், ஒரு தமிழ் நாட்டு பெண்ணிற்கும் பஞ்சாபி பையனிற்கும் இடையே ஏற்படும் காதலும், அந்த காதலை அவர்களுடைய பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் வரை எப்படி கொண்டு செல்கிறார்கள் என்பதை பற்றியது. இந்த புத்தகத்தில் வரும் எளிய ஆங்கில நடை அனைவருக்கும் புரியும் வண்ணத்தில் இருப்பதால் படிக்கும் போது தமிழ் அகராதியை பக்கத்தில் வைத்து கொள்ளவேண்டிய அவசியம் பெரும்பாலும் இருக்காது. மேலும், சேட்டனின் நகைச்சுவை உணர்வு படிக்கும் ஆர்வத்தை தூண்டும்.
படித்து பிடித்த சில வரிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்....
"why would any guy want to be only friends with a girl? It's like agreeing to be near a chocolate cake and never eat it"
"How can such scary parents create somethings so cute?"
"Psycho relatives are constant across cultures"
"My mother didn't answer in words. She responded in nuclear weapons. Tear rolled down her cheeks."
"When estrogen attacks you on all sides, there is not much you can do."
கதை முழுவதும் தமிழ் நாட்டு மக்களின் கலாச்சாரத்தையும், வட நாட்டு மக்களின் கலாச்சாரத்தையும் சகட்டு மேனிக்கு வெளுத்து வாங்கி இருக்கிறார். இது கொஞ்சம் உருத்தலாக இருந்தாலும் அப்போதைக்கு சேட்டனை மன்னிக்கவே மனம் உடன் படுகிறது.
நல்லதொரு பொழுதுபோக்கு புத்தகம் இது, வாய்ப்பு கிடைத்தால் வாங்கி படியுங்கள்.
டிஸ்கி:
ஆங்காங்கே சில கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருக்கிறார். இதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். கதையின் இயல்பு தன்மை குறையாமல் இருக்க உபயோகப்படுத்தியிருப்பார் போல.
0 மறுமொழிகள்:
Post a Comment