கடந்த வாரத்தை தவற விட்டவர்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...
" இருவர் அமரும் இருக்கையில்
உனக்கும் எனக்கும் இடையே
சம்மனமிட்டு அமர்ந்த - உன்
வெட்கதிற்கு எத்தனை டிக்கெட் எடுப்பது...?"
என்று தனக்குள் நினைத்துக் கொண்டான் ரகு. போகும் வழியில் சீதாவிடம் பேசலாம் என்று நினைத்தான் ரகு. ஆனால், அவள் தனது காதுகளுக்கு பாடல்களை கைபேசி மூலம் இறை ஆக்கி கொண்டிருந்தாள். ரகு, அவள் பாடல்களை ரசித்து கேட்கும் அழகினை சிறிது நேரம் ரசித்து கொண்டிருந்தான். உண்மையில் பெண்களின் கூந்தலுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கே இயற்கையில் நறுமணம் உண்டு என்று நினைத்து கொண்டான் ரகு. அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவள் மேல் பட்ட தென்றல் காற்றின் நறுமணத்தில் லயித்து கண்ணயர்ந்து தூங்கிவிட்டான். சீதா இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதால், ரகுவை எழுப்பினாள். ஒரு வழியாக ரகு சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு திரும்பினான்.
ரகுவிடம் விடை பெற்றுக்கொண்டு சீதா பேருந்தில் இருந்து இறங்கி கடந்துவிட்டாள். ரகு மெல்ல அவள் தங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக அவளுக்கு தெரியாமல் பின் தொடர்ந்தான். சீதா தனது விடுதிக்குள் நுழைந்த பின்பு, ரகு அங்கிருந்து தான் தங்கி இருக்கும் இடத்திற்கு சந்தோசத்தின் உச்சத்தில் நடந்தே வந்தான். காதல் அவனது கால்களுக்கு அந்த அளவிற்கு வலிமையை கொடுத்துவிட்டது போல. மீண்டும் ஒரு இரவு அவளது நினைவலைகளில் நீந்தினான் ரகு. அடுத்தநாள், சீதாவிடம் தான் இந்த வாரம் சினிமா பார்க்க செல்ல போவதாகவும், தனது நண்பர்கள் யாரும் ஊரில் இல்லாததால் சீதாவை தன்னுடன் வருமாரும் கேட்டான் ரகு. முதலில் வர மறுத்தவள், ரகுவின் கெஞ்சல்களுக்கு பிறகு சம்மதித்தாள். ரகு அந்த வார இறுதி நாளுக்காக ஒவ்வொரு நொடியையும் கரைத்து கொண்டிருந்தான்.
அந்த நாளும் வந்தது, ஆனால் சீதாவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அதனால், ரகு சீதாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டான். அப்போது தான் தெரிய வந்தது, அவள் தனது சொந்த ஊருக்கு வீட்டில் இருந்து வந்த திடீர் அழைப்பால் சென்றது. ரகுவிடம் சொல்லாமல் சென்றதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டாள். மேலும், தன்னை இங்கே பெண் பார்க்க மாப்பிளை வீட்டார் வந்திருப்பதாகவும் கூறி ரகுவின் இதயத்தை கூரு போட்டாள்.
(பின் தொடருங்கள்...)
டிஸ்கி:
இந்த கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே.
0 மறுமொழிகள்:
Post a Comment