நீங்க கையேந்திபவன் வாடிக்கையாளரா?

இன்று எனது தோழி ஒருவர் அனுப்பிய மின்அஞ்சலில், ஒரு வலைதளத்தின் முகவரி இருந்தது. அதனை சொடுக்கி பார்த்த போது தான் தெரிந்தது, கையேந்திபவன்களில் நடக்கும் கொடூரங்கள்.

மும்பையில் பாணி பூரி விற்கும் 59 வயதான ராஜ்தேவ் கடையில், பாணி பூரிக்கென்று ஒரு கூட்டம் வரும் போல. இதனை 19 வயதான அங்கீதா பரிட்சை விடுமுறையில் பொழுது போகாமல் தனது வீட்டின் மாடியில் இருந்து நோட்டமிட்டிருக்கிறார். அப்படி அவள் கூர்மையாக கவனித்த போது தான் தெரிந்தது, ராஜ்தேவ் பாணி பூரிக்கு ஊற்றும் திரவியத்தில் தனது சிறுநீரை கலப்பது. முதலில் அங்கீதா கூறியதை யாரும் நம்பவில்லை போலும், அதனால் இந்த நிகழ்ச்சியை படம் பிடித்து காட்டிவிட்டாள்.

போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க பட்ட ராஜ்தேவ் மீது என்ன வழக்கு பதிவு செய்ய என குழம்பி, இறுதியில் பொது இடத்தில் சிறுநீர் கழித்தார் என்று வழக்கு பதிவு செய்துள்ளனர் [எல்லாரும் வாங்கி திங்கிற இடம்னா? அது பொது இடமாயா...?].


இனிமேலாவது கையேந்திபவன்களில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்.

டிஸ்கி:
நன்றி மும்பை மிர்ரெர்.
http://www.mumbaimirror.com/article/2/20110413201104130512335194fbde7b8/Do-not-say-you-weren%E2%80%99t-warned.html
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment