வலைத்தள தகவல்கள் திருடு போகிறதா...?

இன்றைய காலகட்டத்தில் வலைத்தளத்தில் உள்ள தகவல்கள் திருடப்படுவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. தகவல்கள் திருடு போவதை ஓரளவிற்கு தான் கட்டுப்படுத்த முடியும். முற்றிலுமாக கட்டுப்படுத்துவது என்பது இயலாத ஒரு விஷயம். பொதுவாக தகவல்களை வலைத்தளங்கலில் இருந்து நகல் எடுக்க உதவும் அடிப்படை வசதிகளை நீக்குவதன் மூலம் இதனை கொஞ்சம் கட்டுப்படுத்தலாம். இது பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இங்கு குறிப்பிடுகிறேன்.

கீழே உள்ள Javascript கோடிங்கை உங்களது வலைத்தளத்தில் இணைப்பதின் மூலம் நகல் எடுக்க உதவும் அடிப்படை வசதிகளை தடை (தற்காலிகமாக) செய்யலாம். உதாரணத்திற்கு, நமது பிளாக்கில் இந்த வசதியை இணைக்க வழிமுறைகள் கீழே.

1. உங்களது பிளாக்கின் டாஸ்போர்ட் (Dashboard) பகுதியில் உள்ள Design என்ற இணைப்பை முதலில் சொடுக்கவும்.


2. அதன் பின்னர் வரும் பக்கத்தில் உள்ள Edit HTML என்ற இணைப்பை சொடுக்கவும்.


3. இறுதியாக கீழே உள்ள Javascript கோடிங்கை என்ற head குறியீட்டிற்கு அடுத்தபடியாக இணைத்துவிட்டு SAVE TEMPLATE என்ற இணைப்பை சொடுக்கவும்.



இனி உங்கள் வலைத்தளத்தில் இருந்து தகவலை நகல் எடுப்பது கொஞ்சம் கடினம் அவ்வளவு தான். இதனை முறியடிக்கும் வழிகளும் உள்ளன :)
இறுதியாக ஒரு உப தகவல், உங்கள் வலைத்தளத்தில் உள்ள தகவல் எந்த வலைத்தளத்தில் நகல் எடுக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய ஒரு வலைத்தளம் உள்ளது.


கீழே உள்ள வலைத்தளத்திற்கு சென்று உங்களது வலைத்தளத்தின் முகவரியை கொடுத்தால் போதும், அதற்கு உண்டான முடிவுகளை உடனே அள்ளி தரும்.

http://www.copyscape.com/


முடிவுகளில் உள்ள இணைப்புகளை சொடுக்குவதன் மூலம் எந்த தகவல் நகல் எடுக்கப்பட்டது என்பதும் வெட்ட வெளிச்சமாகிடும்.


SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment