தென்றலே... தென்றலே...

A.R.ரகுமான் இசையில் பல பாடல்கள் எனக்கு பிடித்தமானவை. அவற்றை ஒன்று இரண்டு என்று விரல் விட்டு எண்ண முடியாது. அந்த வகையில் அவரது இசையில் வந்த இந்த மென்மையான பாடல் எப்போது கேட்டாலும் எனக்கும் பிடிக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் தூங்கும் முன் இந்த பாடலை கேட்பது மனதிற்கு இதமாக இருக்கும். இந்த பாடல் காதல் தேசம் திரைப்படத்தில் வந்த தென்றலே.. தென்றலே... என தொடங்கும் பாடல். தனது காதலிக்கு அவளின் (ஒரு தலை)காதலர்கள் பாடும் தாலாட்டு பாடல் இது. இந்த பாடலை உன்னி கிருஷ்னன் மற்றும் மனோ இணைந்து உருகி உருகி பாடியிருப்பார்கள். பாடலின் மென்மைக்கு ஏற்றார் போல இசையும் மென்மையாக இருக்கும். இப்போது கூட இந்த பாடலை கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன்.
பாடல் வரிகள் கீழே...

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு...
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு...

கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு...

காதல் என்றால் கவலையா?
கண்ணில் நீரின் திவலையா?
நோயானேன் உயிரும் நீயானே
இரவில் காயும் முழு நிலா
எனக்கு மட்டும் சுடும் நிலா
வாராயோ எனை நீ சேராயோ
தூங்க வைக்கும் நிலவே
தூக்கமின்றி
நீ ஏன் வாடினாயோ?

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு...

மாலை வானில் கதிரும் சாயும்
மடியில் சாய்ந்து தூங்கடா
பூமி யாவும் தூங்கும் போது
பூவே நீயும் தூங்கடா
மலரின் காதல் பனிக்கு தெரியும்
என் மனதின் காதல் தெரியுமா?
சொல்ல வார்த்தை கோடி தான்
உன்னை நேரில் கண்டால் மௌனமேன்?
தூங்க வைக்க பாடினேன் 

நான் தூக்கமின்றி வாடினேன்

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு...
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு...

கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு...


பாடலை கேட்க கீழே உள்ள இணைப்ப சொடுக்கவும்...


பாடலை பார்த்து ரசிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...

SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment