செங்காத்து பூமியிலே... பாடல்கள்


இன்று தான் இந்த திரைப்படத்தின் பாடல்களை கேட்டேன். அந்த காலத்து இளையராஜாவின் பாடல்களை மீண்டும் ஒரு முறை கேட்பது போன்ற ஒரு உணர்வை கொடுத்தது. திரைப்படத்தின் பெயரை கேட்டாலே தெரிகிறது, இது கிராமம் சம்பந்தப்பட்ட திரைப்படம் என்று. அதற்கேற்றார் போல பாடல்களும் உள்ளன. குறிப்பாக பாடல்கள் அந்த காலத்து ராமராஜன்,  ராஜ்கிரன் படங்களை நியாபகபடுத்தியது.

ஓரம் போ..

அந்த காலத்தில் மிக பிரபலமான, "பொண்ணு ஊருக்கு புதுசு" திரைப்படத்தில் இடம் பெற்ற ஓரம் போ.. ருக்குமணி வண்டி வருது... என்ற பாடலை தான் இளையராஜா ரீமிக்ஸ் செய்திருக்கிறார். பாடல் நன்றாகவே வந்திருக்கிறது. இந்த பாடலை பிரசன்னா, ஹரிசரண், பிரியா மற்றும் அனிதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு...

இந்த பாடல், இளையராஜா எப்போதும் கொடுக்கும் தரமான இனிமையான பாடல் வகையாகும். இந்த பாடலை பிரசன்னா மற்றும் பிரியா இணைந்து பாடியுள்ளனர்.

காத்திருப்பேன்.. காத்திருப்பேன்...

இதுவும் ஒரு மென்மையான பாடல். இந்த பாடலை ரீட்டா பாடியுள்ளார். அரண்மனை கிளி திரைப்படத்தில் வரும் ஒரு பாடலை இது நினைவுபடுத்தியது.


என் உசுரு...

இந்த பாடலின் தொடக்கம் "நினைவெல்லாம் நித்தியா திரைப்படத்தில் வரும் பனி விழும் மலர் வனம்... பாடலை நினைவு படுத்தியது. ஆனால், சில நொடிகளில் அது ஒரு மென்சோக பாடலாக மாறியது. இந்த பாடலையும் ரீட்டா தான் பாடியுள்ளார்.

மற்ற இரண்டு குறும்பாடல்களும் திருவிழாக்களில் இடம்பெறும் வகையறா பாடல்கள்.


பாடல்களை கேட்க கீழே உள்ள இணைப்புகளை சொடுக்கவும்...

ஓரம் போ..
சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு...
காத்திருப்பேன்.. காத்திருப்பேன்...
என் உசுரு...
திருவிழா பாடல் 1
திருவிழா பாடல் 2

SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment